கருணா -பிள்ளையான் குழு முக்கியஸ்தர் இனிய பாரதியின் மற்றொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று வியாழக்கிழமை (28.08.25) அன்று மாலை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் திருமதி தெசீபா ரஜீபன் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் அடையாளம் காணப்பட்ட பல இடங்கள் தோண்டப்பட்டு வருகின்றன. கடந்த 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து கருணா- பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் முக்கிய சகாவாக செயற்பட்ட அம்பாறை மாவட்ட காரைதீவு பகுதியை சேர்ந்த சந்தேக நபர் குறித்த பகுதிக்கு கைவிலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அவர் கடந்த காலங்களில் திருக்கோவில் பகுதியில் தனியார் தொலைத்தொடர்பு சிம் விற்பனை முகவராக செயற்பட்ட அருளானந்தன் சீலன் என்பவரை கடத்தி படுகொலை செய்து குறித்த இடத்தில் புதைத்திருப்பதாக அரசு சாட்சியாக மாறி குற்றப்புலனாய்வு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார். இதன் போது குறித்த பிரதேசத்தை சுற்றி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது டன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி உட்பட பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் காவற்துறையினர் விசேட அதிரடிப்படையினர் தடயவியல் காவற்துறையினர் என பலரும் பிரசன்னமாகியிருந்தனர். கடந்த 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து கருணா-பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் முக்கிய சகாவாக செயற்பட்ட அனோசியஸ் சுரேஷ் கண்ணா எனப்படும் யூட் எனும் சந்தேக நபர் ஏற்கனவே கடந்த மாதம் ஜூ (31.07.25) அன்று குறித்த பொது மயானத்திற்கு கைவிலங்கிடப்பட்டு அழைத்து செல்லப்பட்டு இருந்தார்ர். எனினும் குறித்த நபர் வாக்கு மூலத்திற்கமைய திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட பொது மயானத்தில் தேடுதல் மற்றும் தோண்டப்பட்ட பின்னர் எதுவும் கிடைக்காத காரணத்தினால் குறித்த செயற்பாடுகள் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டன.பின்னர் மற்றுமொருவரின் வாக்கு மூலத்திற்கமைய இன்று மற்றொரு இடமான தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இனிய பாரதியின் சகாவின் வாக்குமூலம்- 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுப்பு! – Global Tamil News
19