18
வீதியில் சென்றவரை தாக்கிய கடற்படை சிப்பாய் – தாக்குதலுக்கு இலக்கானவர் உயிரிழப்பு வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை வழி மறித்து தாக்கியதில் , தாக்குதலுக்கு இலக்கான நபர் உயிரிழந்துள்ளார். தம்புள்ள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை , வீதியில் வழிமறித்து கடற்படை சிப்பாய் தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான 59 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் தாக்குதலாளியான 26 வயதுடைய கடற்படை சிப்பாயை கைது செய்துள்ளனர். முன் பகை காரணமாகவே கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.