யாழில். சிகிச்சை பெற்ற சந்தேக நபர் தப்பியோட்டம் – காவற்துறை சார்ஜெண்ட் பணி இடை நீக்கம்! – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சந்தேகநபர் ஒருவர் தப்பியோடியுள்ள சம்பவத்தை அடுத்து, காவற்துறை சார்ஜெண்ட் ஒருவர்  செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை காவற்துறை  பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் 25ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சுகவீனமடைந்த நிலையில் , பொலிஸ் பாதுகாப்புடன் , யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வைத்தியசாலையில் இருந்து தப்பியோடியுள்ளார். அதனை அடுத்து சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் மல்லாகம் நீதவான் நீதிமன்றுக்கு அறிவித்து , நீதிமன்றினால் சந்தேக நபருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் , சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் உள்ளக விசாரணைகளை அடுத்து , சந்தேகநபர் தப்பி சென்ற நிலையில் , அன்றைய தினம் சந்தேக நபரின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த காவற்துறை  சார்ஜெண்ட் தர உத்தியோகஸ்தர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Related Posts