Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
படக்குறிப்பு, நிமிஷா பிரியாகிறிஸ்தவ நற்செய்தியாளர் (evangelist) கேஏ பால் என்பவர், ஏமன் நாட்டில் மரண தண்டனை கைதியாக உள்ள கேரள செவிலியர் நிமிஷா பிரியா வழக்கு குறித்து செய்தி வெளியிட ஊடகங்களுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு திரும்பப் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்யப்பட்டதாக ‘லைவ் லா’ இணையதளம் குறிப்பிடுகிறது.இந்த வழக்கு விசாரணையின்போது “நிமிஷா பிரியாவுக்கு ஏதேனும் நடந்தால் நான் பொறுப்பல்ல” என கேஏ பால் தெரிவித்ததாக அச்செய்தி கூறுகிறது. கொலையான ஏமன் நாட்டு குடிமகனான அப்தோ மஹ்தியின் குடும்பத்தினருடன் கேஏ பால் தொடர்பில் இருப்பதாகவும் ஊடக செய்திகளுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என விரும்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா முன் விசாரணைக்கு வந்தபோது கேஏ பாலின் மனுவை விசாரிக்க அவர்கள் மறுத்தனர். எனினும், அவர் தன் மனுவை திரும்ப பெற்றுக்கொண்டதால் தள்ளுபடி செய்யப்பட்டது.நீதிமன்றத்தில் மற்றொரு மனுவை தாக்கல் செய்துள்ள சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில், விசாரணையின் போது ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதைத் தவிர்ப்பதாகவும் தெரிவித்தது. வழக்கின் பின்னணி என்ன?கேரளாவின் பாலக்காடைச் சேர்ந்த நிமிஷா பிரியா, கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியர் பணிக்குச் சென்றார்.அங்கிருந்த சில மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி வந்து டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். டோமி தாமஸும், நிமிஷாவின் மகளும் இப்போது கேரளாவில் வசித்து வருகின்றனர்.நிமிஷா, 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். 2017ஆம் ஆண்டு, ஏமனின் அல்-பைதா நகரில், ஒரு தண்ணீர் தொட்டியில் மஹ்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.மஹ்தியின் துண்டாக்கப்பட்ட உடல் தண்ணீர் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாதம் கழித்து ஏமனின் மாரிப் எனும் நகரில் நிமிஷா கைது செய்யப்பட்டார்.மஹ்திக்கு ‘அதிகப்படியான மயக்க மருந்து’ கொடுத்து கொலை செய்ததாகவும், அவரது உடலை அப்புறப்படுத்த முயன்றதாகவும் நிமிஷா மீது குற்றம் சாட்டப்பட்டது.மஹ்தி நிமிஷாவை உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும், அவரது பணத்தை எல்லாம் பறித்ததாகவும், பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் நிமிஷாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.இந்தக் கூற்றுகளை தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்தெல் ஃபத்தா பிபிசியிடம் மறுத்திருந்தார்.தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து மீட்கவே, அவருக்கு நிமிஷா மயக்க மருந்து கொடுத்தார் என்றும் ஆனால் தவறுதலாக மருந்தின் அளவு கூடிவிட்டது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.2020ஆம் ஆண்டில், சனாவில் உள்ள நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. 2023இல் ஏமன் உச்ச நீதிமன்றத்தால் அது உறுதி செய்யப்பட்டது. நிமிஷா பிரியா, தற்போது சனா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.கடந்த ஜூலை 16ஆம் தேதி நிமிஷா பிரியாவுக்கு நிறைவேற்றப்படவிருந்த மரண தண்டனை கடைசி நேரத்தில் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.