சமமண மனத பதகழயல 16 எலமபககடகள அடயளம கணபபடடளளன – 4ககம மறபடடத சறவரகளடயத

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரண்டாம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.அதன் போது, ஏற்கனவே அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாய்வு தளங்களை மேலும் விஸ்தரிக்கும் நடவடிக்கைகளின் போது புதிதாக  16 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றினை சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அவற்றினை அகழ்ந்து எடுக்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.அவற்றில் சிறுவர்களுடைய என சந்தேகிப்படும் எலும்புக்கூட்டு தொகுதிகளும், ஆடையை ஒத்த துணியும் அடையாளம் காணப்பட்டுள்ளது.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 34ஆவது நாளாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியில் 16 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.அதேவேளை கட்டம் கட்டமாக 42 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 150 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் அவை முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இன்றைய தினம் புதிதாக 16 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.