கியூ வீதியில் ஆர்ப்பாட்டம் – “அனுர கோ ஹோம்” என கோசம்! – Global Tamil News

by ilankai

ழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள கியூ வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘அனுர கோ ஹோம்’ தொடங்கிவிட்டது என கோசமிட்டுள்ளனர். கூட்டத்தினரிடையே உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்தன, அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டுப் போராட்டம் இப்போது தொடங்கிவிட்டது என்று கூறினார். இந்த அடக்குமுறை ஊர்வலத்திற்கு அதிக ஆயுள் இல்லை என்றும் கவிந்த ஜெயவர்தன கூறினார். இதேவேளை, நீதிமன்றத்துக்கு வருகைதந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் ஆசு மாரசிங்க ஆகியோரை காவற்துறையினர் நீதிமன்றத்துக்குள் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. எனினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் நீதிமன்ற வழக்கு விசாரணை அறையில் பிரசன்னமாய் உள்ளனர்.

Related Posts