34
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில், ரணிலின்றி ஸூம் தொழிற்நுட்பம் ஊடாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. இதேவேளையில் கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு வெளியே, எதிர்க்கட்சியினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் பணியில் இருந்த ஒரு காவற்துறை சிப்பாய், போராட்டக்காரர் ஒருவர் வீசிய போத்தல் தாக்கியதில் காயமடைந்தார். நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, போத்தல், ஒரு யூடியூபரை குறிவைத்து வீசப்பட்டது, ஆனால் காவற்துறையினர் பின்னால் மறைந்திருந்தபோது அவர் மீது பட்டுள்ளது.