மருத்துவ பரிசோதனைக்கு பிறகு என்ன நடந்தது? கர்ப்பிணியை கொன்று உடல் பாகங்களை ஆற்றில் வீசிய கணவன்
பட மூலாதாரம், UGC
படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் குகட்பள்ளியில் உள்ள ஆர்ய சமாஜில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.எழுதியவர், அமரேந்திர யர்லாகட்டாபதவி, பிபிசி செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
(எச்சரிக்கை: இந்த செய்தியில் உள்ள சில விஷயங்கள் உங்களுக்கு சங்கடம் தரலாம்)
ஹைதராபாத்த்தில் ஐந்து மாத கர்ப்பிணி அவரின் கணவரால் கொலை செய்யப்பட்டுள்ளார். கணவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ரச்சாகொண்டா காவல் ஆணையரகத்தின் மெடிபல்லி காவல் நிலைய எல்லையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஸ்வாதி என்கிற பெண்ணை கொலை செய்த அவரின் கணவர் மகேந்தர் ரெட்டி, ஸ்வாதியின் உடல் பாகங்களை முசி நதியில் எறிந்துள்ளார்.
இந்த கொலை தொடர்பான தகவல்களை துணை காவல் ஆணையர் பிவி பத்மஜா பகிர்ந்து கொண்டார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரச்சாகொண்டா ஆணையரகத்துக்கு உட்பட்ட மீர்பேட்டில் நடந்த கொலைக்குப் பிறகு அதேபோன்றதொரு சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
என்ன நடந்தது? காவல்துறையின் கூற்று
மகேந்தர் மற்றும் ஸ்வாதி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த சில வாரங்களாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விக்ரபாத் மாவட்டத்தில் உள்ள கமாரெட்டிகுடா பகுதியைச் சேர்ந்த சமலா மகேந்தர் என்பவர் அதே ஊரைச் சேர்ந்த ஸ்வாதி என்பவருக்கு அறிமுகமானார். இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் குகட்பள்ளியில் உள்ள ஆர்ய சமாஜில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இருவரின் திருமணத்திற்கு முதலில் குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் ஒப்புக்கொண்ட பிறகு இருவரும் திருமணம் முடித்து ஹைதராபாத்தில் குடியேறினர்.
மகேந்தர் ராபிடோவில் பைக்ஸ் டாக்ஸி ஓட்டி வந்துள்ளார். ஸ்வாதி ஒரு கால் சென்டரில் சில நாட்கள் வேலை பார்த்துவிட்டு பின்னர் விலகினார்.
போடுப்பல் பாலாஜி ஹில்ஸ் பகுதியில் 8 மாதம் வசித்தவர்கள் பின்னர் சிலுகாநகருக்கு இடம்பெயர்ந்தனர். ஆனால் 20 நாட்களுக்கு முன்பு மீண்டும் பாலாஜி ஹில்ஸ் பகுதியில் உள்ள அதே வீட்டில் குடியேறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஸ்வாதி 5 மாத கர்ப்பமாக இருந்ததாக டிசிபி பத்மஜா தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், “வரும் 27-ம் தேதி மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு ஊருக்குச் செல்லலாம் என்று கடந்த வெள்ளிக்கிழமை ஸ்வாதி தனது கணவர் மகேந்தரிடம் கேட்டுள்ளார். அவரின் கணவர் ஒப்புக்கொள்ளாதபோது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அதற்குப் பிறகு ஸ்வாதியை கொலை செய்ய மகேந்திரன் திட்டமிட்டுள்ளார்” என்றார்.
சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு இன்னொரு சண்டை ஏற்பட்டபோது மகேந்தர் ஸ்வாதியை கொலை செய்துள்ளார்.
அதன் பிறகு அவரின் உடல் பாகங்களை எடுத்துச் சென்று முசி நதியில் வீசியது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
பட மூலாதாரம், UGC
படக்குறிப்பு, துணை காவல் ஆணையர் பத்மஜா செய்தியாளர் சந்திப்பு நடத்தி கொலை சம்பவம் பற்றி விவரித்தார்.கொலைக்கான நோக்கம் என்ன?
திருமணம் நடைபெற்ற ஒரு மாதத்திலே மகேந்தருக்கும் ஸ்வாதிக்கும் இடையே சண்டை தொடங்கியதாக பத்மஜா தெரிவிக்கிறார்.
“ஏப்ரல் மாதம், மகேந்தர் மீது விக்ராபாத் காவல் நிலையத்தில் ஸ்வாதி குடும்ப வன்முறை புகார் ஒன்றை அளித்துள்ளார். பின்னர் குடும்பத்தினர் தலையிட்டு சமரசம் எட்டிய நிலையில் மீண்டும் ஹைதராபாத்துக்கு வந்து தங்கியுள்ளனர்” என அவர் தெரிவித்தார்.
அதன் பின்னரும் சண்டை தொடர்ந்ததாகக் கூறிய பத்மஜா, முன்கூட்டியே ஸ்வாதியைக் கொல்ல மகேந்தர் திட்டமிட்டதாக தெரிவித்தார். கொலையைச் செய்தவர் ஆதாரத்தை அழிக்க முயற்சித்ததாகவும் கூறினார்.
படக்குறிப்பு, இருவரும் வசித்து வந்த வீடுஎப்போது நடந்தது?
அதே கட்டடத்தில் வசிக்கும் சுஜாதா பிபிசியிடம் பேசுகையில், “சனிக்கிழமை இரவு 7 மணிக்கு மகேந்தர் தொப்பி அணிந்து கையில் போர்வையை வைத்தவாறு சென்றார் எனத் தெரிவித்தார்.
“நான் சமையல் வேலையில் இருந்தபோது மகேந்தர் பையுடன் வெளியே நடந்து சென்றார்” என்று கூறுகிறார் சுஜாதா.
சனிக்கிழமை இரவு 7.10 மணிக்கு மகேந்தர் வீட்டிலிருந்து பையுடன் வெளியே செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
ஸ்வாதியின் உடல் பாகங்களை எடுத்துச் சென்று ஹைதராபாத்தின் வெளிப்புறத்தில் முசி நதியில் வீசியுள்ளார் என பத்மஜா தெரிவித்தார். மூன்று முறை முசி நதிக்குச் சென்று வந்தவர் தனது சகோதரி சந்திரகலாவிற்கு அழைத்து ஸ்வாதியை காணவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், UGC
படக்குறிப்பு, ஸ்வாதியின் உடல் பாகங்கள் ஒரு கவரில் வைக்கப்பட்டு முசி நதியில் வீசப்பட்டது.”இருவருக்கும் இடையே அடிக்கடி ஏற்பட்டு வந்த சண்டைகள் பற்றி சந்திரகலாவிற்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. அவர் ஹைதராபாத்தில் உள்ள உறவினரான கோவர்தனுக்கு தெரிவித்துள்ளார். அவர் வந்து சந்திரகலாவை காவல்துறையிடம் அழைத்துச் சென்றுள்ளார். ஸ்வாதியை காணவில்லை என புகார் அளிக்க நினைத்துள்ளார் மகேந்தர். காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரைப் பிடித்து விசாரித்தபோது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்” என பத்மஜா தெரிவித்தார்.
சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொலை நடந்துள்ளது.
காவல்துறையினர் மகேந்தரை முசி நதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர் கொடுத்த தகவலின்படி பேரிடர் மீட்பு படையினர் முசி நதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால் எந்த உடல் பாகங்களும் கிடைக்கவில்லை.
ஸ்வாதி இதற்கு முன்னர் கர்ப்பமான போதும் கூட குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என அவரை வற்புறுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார். அவர் மீண்டும் கர்ப்பமானது மகேந்தருக்கு பிடிக்கவில்லை.
பட மூலாதாரம், UGC
‘தினமும் வந்தவர், அன்று மட்டும் வரவில்லை’
பாலாஜி ஹில்ஸ் பகுதியில் ஒரு சிறிய தெருவில் உள்ள குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் இருவரும் வசித்து வந்துள்ளனர். அந்த வீடு தற்போது பூட்டப்பட்டுள்ளது. பிபிசி அங்கு சென்றபோது ஸ்வாதியின் செருப்பு வெளியில் இருந்தது.
அதே வீட்டின் தரை தளத்தில் வசிக்கும் ஊர்மிளா, ஸ்வாதியை தினமும் சந்தித்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று நாள் முழுவதும் அவர் கீழே வரவே இல்லை என்றார்.
“அதற்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை தங்கத்தை அடகு வைக்கச் சென்று வந்ததாக தெரிவித்தார். அவர் கர்ப்பமாக இருந்ததால் எதுவும் சாப்பிடவில்லை எனக் கூறினார். நான் என் வீட்டில் சாப்பிட வைத்தேன். பின்னர் சோர்வாக இருப்பதாகக் கூறிவிட்டு தனது வீட்டிற்கே மீண்டும் சென்றார்” என பிபிசியிடம் தெரிவித்தார் ஊர்மிலா.
தனது கணவர் அடிப்பதால் மோசமான காது வலி இருப்பதாக ஸ்வாதி தன்னிடம் கூறினார் என ஊர்மிளா தெரிவித்தார். கடைசியாக ஸ்வாதியை வெள்ளிக்கிழமை மாலை பார்த்ததாகக் குறிப்பிட்டார்.
“மருத்துவ பரிசோதனைக்குச் சென்றுவிட்டு வருவதாகக் ஸ்வாதி கூறினார்” எனத் தெரிவித்தார் ஊர்மிலா.
படக்குறிப்பு, ஸ்வாதியின் தந்தை ராமுலுபெற்றோர் என்ன சொல்கிறார்கள்?
ஸ்வாதியின் இறப்பு செய்தி கேட்ட உடனே அவரின் தந்தை ராமுலுவும் அவரின் உறவினர்களும் மெடிபள்ளி காவல்நிலையம் சென்றுள்ளனர். “அவர்களின் திருமணத்திற்கு மறுத்ததிலிருந்து ஸ்வாதி தன்னிடம் பேச மறுத்துவிட்டார், அதற்குப் பிறகு என்னிடம் பேசவே இல்லை” என்கிறார் ராமுலு.
“அவர்கள் திருமணத்துக்குப் பிறகு ஹைதராபாத்தில் வசித்து வந்தனர். அவர்களிடைய சண்டை ஏற்பட்டால் நாங்கள் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைப்போம்” என ராமுலு பிபிசியிடம் தெரிவித்தார்.
தனது மகளைக் கொன்றதற்காக மகேந்தர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என ராமுலு கூறுகிறார்.
மகேந்தரின் தந்தை சோமி ரெட்டியிடம் இது தொடர்பாக பேச முயற்சித்தபோது, “நாங்கள் தற்போது எதுவும் கூற முடியாது. எங்களிடமிருந்த முரண்பாடுகளை தீர்த்துவிட்டோம். இது நடக்கும் என நான் நினைக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
மகேந்தரின் வாக்குமூலத்தின் படி தொழில்நுட்ப மற்றும் இதர ஆதாரங்களைச் சேகரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
“டி.என்.ஏ. பரிசோதனைக்குப் பிறகு வீட்டில் கிடைத்த உடல் பாகங்களை ஸ்வாதியின் குடும்ப உறுப்பினர்களிடம் வழங்கிவிடுவோம். இந்த வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார் பத்மஜா.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு