முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பில் விவாதிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் குழு நேற்று மாலை கொழும்பிற்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவைச் சந்தித்துள்ளது.
அத்துடன் இன்று இலங்கை வருகை தரும் அமெரிக்க தூதுக்குழுவையும் சந்திக்க ஐக்கிய தேசியக் கட்சி எதிர்பார்த்துள்ளது.
இதனிடையே தயவுசெய்து ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்யுங்கள் என அவரது முன்னாள் பங்காளியான எரிக் சொல்ஹெய்ம் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இலங்கை, தெற்காசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பல தலைவர்களுடன் நானும் இணைவதுடன் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
விளக்கமறியலின் போது அவரது உடல்நிலை குறித்து நாம் அனைவரும் கவலைப்படுகிறோம்.2022 ஆம் ஆண்டில் நாடு பொருளாதார மற்றும் அரசியல் குழப்பம் அடைந்தபோது இலங்கையைக் காப்பாற்ற எழுந்து நின்ற தலைவர் ரணில் விக்கிரமசிங்க. ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தகுதியற்றவை. அவை உண்மையாக இருந்தாலும், ஐரோப்பாவில் அவை எந்தவொரு குற்றமாகவோ அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தையையும் கொண்டிருக்காதெனவும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.