Monday, August 25, 2025
Home பிபிசிதமிழிலிருந்துபாகிஸ்தானை நெருங்குகிறதா வங்கதேசம்? – துணை பிரதமர் இஷாக் தாரின் வங்கதேச பயணம் சொல்வது என்ன? – BBC News தமிழ்

பாகிஸ்தானை நெருங்குகிறதா வங்கதேசம்? – துணை பிரதமர் இஷாக் தாரின் வங்கதேச பயணம் சொல்வது என்ன? – BBC News தமிழ்

by ilankai
0 comments

வங்கதேசம் சென்ற பாகிஸ்தான் அமைச்சர் – மன்னிப்பு கேட்குமாறு வங்கதேச கட்சிகள் கூறுவது ஏன்?

பட மூலாதாரம், X/FOREIGNOFFICEPK

படக்குறிப்பு, என்.சி.பி.யின் அக்தர் ஹுசைன் (இடது) பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மொஹம்மது இஸ்ஹாக் டாரை சந்தித்தார்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் மூன்று நாள் பயணமாக வங்கதேசம் சென்றுள்ளார். இந்த பயணத்தை பாகிஸ்தான் ‘வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது’ என்று விவரித்துள்ளது.

banner

கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஒருவர் வங்கதேசத்திற்கு செல்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு, 2012இல் ஹினா ரப்பானி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சராக வங்கதேசத்திற்கு பயணம் செய்திருந்தார்.

1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரின் போது பாகிஸ்தானின் செயலுக்காக மன்னிப்பு கோர வேண்டுமா என்பது குறித்து வங்கதேசத்தில் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது.

இஷாக் தார் கடந்த ஏப்ரல் மாதம் வங்கதேசம் செல்ல திட்டமிட்டிருந்தார், ஆனால் பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் இந்தியாவுடனான பதற்றம் காரணமாக அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் சந்திப்பு

பட மூலாதாரம், X/FOREIGNOFFICEPK

படக்குறிப்பு, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மொஹம்மது இஷாக் தார், வங்கதேச தேசியவாத கட்சி (பி.என்.பி.), ஜமாத்-இ-இஸ்லாமி வங்கதேசம் மற்றும் தேசிய குடிமக்கள் கட்சி (நேஷனல் சிடிசன்ஸ் பார்ட்டி – என்.சி.பி.) ஆகியவற்றின் பிரதிநிதிகளை சந்தித்தார்சனிக்கிழமை மதியம் டாக்காவை அடைந்த இஷாக் தாரை, வங்கதேச தேசியவாத கட்சி (பி.என்.பி), ஜமாத்-இ-இஸ்லாமி வங்கதேசம், மற்றும் நேஷனல் சிடிசன்ஸ் பார்ட்டி (என்.சி.பி) ஆகியவற்றின் பிரதிநிதிகள் சந்தித்தனர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

“பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான மொஹம்மது இஷாக் தார், அக்தர் ஹுசைன் தலைமையிலான நேஷனல் சிடிசன்ஸ் பார்ட்டி (என்.சி.பி) பிரதிநிதிகள் குழுவை சந்தித்தார். இந்த சந்திப்பில், இஸ்ஹாக் டார், என்.சி.பி.யின் சீர்திருத்த மற்றும் சமூக நீதி தொலைநோக்கு பாராட்டி, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச இளைஞர்களிடையே அதிக உரையாடல் இருக்க வேண்டும் என்று கூறினார்,” என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டது:

சந்திப்பிற்குப் பின்னர், வங்கதேசம்-பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்த, 1971ஆம் ஆண்டு விடுதலைப் போர் தொடர்பான பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று நேஷனல் சிடிசன்ஸ் பார்ட்டி (என்.சி.பி.) கூறியது.

இருதரப்பு உறவுகளில் தீர்க்கப்படாத பிரச்னைகளை விரைவில் தீர்க்க வேண்டிய அவசியம் உள்ளது, என ஜமாத்-இ-இஸ்லாமி வங்கதேசம் கூறியது:

சந்திப்பிற்குப் பின்னர், வங்கதேச தேசியவாத கட்சி (பி.என்.பி.) எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை. இஷாக் தார் ஞாயிற்றுக்கிழமை மாலை பி.என்.பி. தலைவர் காலிதா ஜியாவை சந்திப்பார் என பி.என்.பி. ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இருப்பினும், 1971 விடுதலைப் போரின் போது பாகிஸ்தானின் செயல்பாடுகளுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்பது உட்பட வங்கதேசத்தில் பல்வேறு சமயங்களில் எழுப்பப்பட்ட கோரிக்கைகள் குறித்து இந்த முறை விவாதிக்கப்படுமா என்பது பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்த விவகாரம் குறித்து தகவல் பெறுவதற்காகவெளியுறவு ஆலோசகர் தவ்ஹீத் ஹுசைனை , சனிக்கிழமை பிபிசி வங்காளம் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றது, ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

பாகிஸ்தான் மன்னிப்பு கோருமா?

முந்தைய அவாமி லீக் அரசின் காலத்தில் வங்கதேசத்திற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் சுமுகமாக இல்லை. இரு நாடுகளுக்கிடையிலான அரசு பயணங்கள் மற்றும் உரையாடல்கள் மிகவும் குறைவாகவே இருந்தன.

எனினும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் நிலைமைகள் மாறியுள்ளன. பல்வேறு நிலைகளில் இரு நாடுகளின் பிரதிநிதிகள் குழுக்களின் பயணங்களைத் தொடர்ந்து, இந்த முறை அரசின் உயர்மட்ட பிரதிநிதிகளும் அரசு பயணங்களை மேற்கொள்கின்றனர்.

இஷாக் தாருக்கு முன்னர், புதன்கிழமை பாகிஸ்தானின் வணிக அமைச்சர் ஜாம் கமால் கான் வங்கதேசம் சென்றிருந்தார். அவர், வங்கதேசத்தின் இடைக்கால அரசின் வணிக ஆலோசகர் ஷேக் பஷீருதீன் உள்ளிட்ட பிற தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

முன்னாள் தூதர்கள் மற்றும் பன்னாட்டு உறவு ஆய்வாளர்கள், இரு நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகளிடையிலான இந்த உரையாடல்கள் உறவுகளை மேம்படுத்துவதில் நேர்மறையான பங்கு வகிக்கும் என்று கருதுகின்றனர்.

“இத்தகைய உயர்மட்ட பயணங்கள் பொதுவாக உறவுகளில் அரசியல் உந்துதலை ஏற்படுத்துகின்றன. எனவே, இந்த வகையில் இஷாக் தாரின் பயணம் முக்கியமானது. வெளியுறவு அமைச்சர் மட்டத்தில் பயணம் நடைபெறும்போது, பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து பிரச்னைகளும் விவாதிக்கப்படுகின்றன,” என வங்கதேசத்தின் முன்னாள் தூதர் எம். ஹுமாயூன் கபீர், பிபிசி வங்காளத்திடம் கூறினார்

பாகிஸ்தான் மட்டுமல்ல, வங்கதேசமும் அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை பேணுவது அவசியம் என ஆய்வாளர்கள் சொல்கின்றனர். ஆனால், பாகிஸ்தான் விஷயத்தில், வங்கதேசத்தின் வரலாற்று கோரிக்கைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

“1971இல் நடந்த படுகொலைகளுக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் (பாகிஸ்தான்) இதை பல்வேறு வழிகளில் கூறியுள்ளனர். ஆனால், நாங்கள் அவர்கள் இந்த பொறுப்பை ஏற்று, பொதுவெளியில் தீர்வு காண வேண்டும் என்று விரும்புகிறோம்,” என ஹுமாயூன் கபீர் மேலும் கூறுகிறார்.

கடந்த ஏப்ரல் 17இல் வங்கதேசம்-பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர்கள் மட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், வங்கதேசம் தொடர்ந்து ‘விடுதலைப் போரின் போது நடந்த அட்டூழியங்களுக்கு மன்னிப்பு கோருதல் அல்லது சுதந்திரத்திற்கு முந்தைய பகிரப்பட்ட வளங்களுக்கான நிலுவைத் தொகையை கோருதல்’ போன்ற பிரச்னைகளை முன்னெடுத்துள்ளது.

அப்போது, வங்கதேசம் பாகிஸ்தானிடமிருந்து பிரிந்தபோது இழப்பீடாக 4.32 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனினும், பாகிஸ்தானின் அறிக்கையில் எந்தவொரு தீர்க்கப்படாத பிரச்னையும் குறிப்பிடப்படவில்லை.

1971 படுகொலைகளுக்கு மன்னிப்பு கோராமல் எந்த அரசும் பாகிஸ்தானுடனான உறவுகளில் பெரிய முன்னேற்றம் அடைய முடியாது, என முன்னாள் தூதர் ராஷித் அஹ்மத் சவுத்ரி கருதுகிறார்:

“வணிகம், பொருளாதார உறவுகள், மற்றும் மக்களிடையேயான தொடர்புகள் நிச்சயமாக முன்னேற வேண்டும். ஆனால், இந்த பயணம் வெற்றிகரமாக இருக்க, பாகிஸ்தானுடனான நிலுவையில் உள்ள பிரச்னைகளை தீர்க்க வேண்டும்,” என அவர் சொல்கிறார்.

இரு நாடுகளுக்கிடையில் ஆறு ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை (MoU) இறுதி செய்யப்பட்டுள்ளன, இவை விரைவில் கையெழுத்தாகும். இதில் அரசு மற்றும் தூதரக பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா தேவையை நீக்குவது மற்றும் வணிகத்திற்கு பொதுவான உத்தி உருவாக்குவது போன்றவை அடங்கும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.’இஷாக் தாரின் பயணத்தை கவனிக்கும் இந்தியா’

லீலா ஜெய்ன்சிடோ, பிரான்ஸ் 24 ஊடக நிறுவனத்தில் மூத்த ஆசிரியராக உள்ளார்.

இஷாக் தாரின் பயணம் குறித்து அவர் இவ்வாறு சொல்கிறார், “நிச்சயமாக இந்தியா இந்த பயணத்தை உன்னிப்பாக கவனிக்கிறது. இரு நாடுகளின் நெருக்கமான உறவு இந்தியாவை பெரிதும் கவலையடையச் செய்கிறது. அதிகாரப்பூர்வமாக இந்தியா, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை ஆதரிக்கவில்லை என்று கூறினாலும், ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். பாகிஸ்தானுடனான உறவு சுமுகமாக இல்லாததால் இந்தியா எச்சரிக்கையாக உள்ளது. இந்த ஆண்டு மே மாதம் இரு நாடுகளும் மோதல் நிலையில் இருந்தன.”

“வங்கதேசம் இந்தியாவின் அண்டை நாடுகளில் மிக நெருங்கிய கூட்டாளியாக இருந்தது, ஆனால் இப்போது அது இந்தியாவின் முக்கிய எதிரியுடன் நெருக்கமாகிறது,” என இந்த பயணத்திற்கு முன், தெற்காசிய விவகார ஆய்வாளர் மைக்கேல் குகல்மேன் கூறியிருந்தார்.

தெற்காசியாவில் கடந்த ஆண்டுகளில் மிகப்பெரிய புவிசார் அரசியல் நிகழ்வுகளில் ஒன்றாக வங்கதேசம்-பாகிஸ்தான் உறவுகளின் புதிய தொடக்கம் உள்ளது. ஹசீனா அரசின் 15 ஆண்டு ஆட்சியில் உறவுகள் கிட்டத்தட்ட முடங்கியிருந்தன. ஆனால், இதன் நீண்டகால தாக்கம், வரவிருக்கும் பிப்ரவரி மாத வங்கதேச தேர்தல்களுக்குப் பின் தெளிவாகும்,” என சனிக்கிழமை குகல்மேன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

“அடுத்த வங்கதேச அரசு பி.என்.பி. தலைமையில் இருக்கலாம், அது இந்தியாவுடனான உறவை மேம்படுத்த முயற்சிக்கலாம். இருப்பினும், சவால்கள் மிக அதிகம்,” என குகல்மேன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

You may also like