Monday, August 25, 2025
Home யாழ்ப்பாணம்செம்மணி மனித புதைகுழியில் அகழ்வாய்வு தளம் விஸ்தரிக்கப்படுகிறது

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வாய்வு தளம் விஸ்தரிக்கப்படுகிறது

by ilankai
0 comments

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில் , கடந்த 06ஆம் திகதி வரையில் 32 நாட்கள் முன்னெடுக்ககப்பட்ட நிலையில் , பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

இந்நிலையில் 33ஆவது நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் ஆரம்பமானது.

இன்றைய தினம், ஏற்கனவே இருந்த அகழ்வு தளங்களை மேலும் விரிவாக்கம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாளைய தினமும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

banner

அதேவேளை கடந்த 06ஆம் திகதி வரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 150 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் அவை முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 14 ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது மேலும் அகழ்வு பணிகள் முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கான பாதீடுகளை தயாரிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுகிறது.

You may also like