Sunday, August 24, 2025
Home பிபிசிதமிழிலிருந்துசெர்ஜியோ கோர்: இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக டிரம்ப் இவரை நியமித்தது ஏன்? முழு பின்னணி – BBC News தமிழ்

செர்ஜியோ கோர்: இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக டிரம்ப் இவரை நியமித்தது ஏன்? முழு பின்னணி – BBC News தமிழ்

by ilankai
0 comments

50% வரி விதிப்புக்கு நடுவே டிரம்ப் தனது ‘வலது கையை’ இந்தியாவுக்கான தூதராக நியமித்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கென்னடி மையத்தில் உரையாற்றும் செர்ஜியோ கோர் (கோப்புப் படம்)24 ஆகஸ்ட் 2025, 01:47 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

banner

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22), செர்ஜியோ கோரை இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராகவும், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான சிறப்புத் தூதராகவும் நியமிக்கப் போவதாகக் கூறினார்.

டிரம்ப் நிர்வாகத்தில், கோர் தற்போது ‘அதிபர் பணியாளர்கள் நியமன தலைவராக’ (Head of Presidential Personnel Appointments) உள்ளார். தூதராக அவரது நியமனம் இன்னும் அமெரிக்க செனட் சபையால் அங்கீகரிக்கப்படவில்லை.

இந்தியா அமெரிக்காவுடன் வரிகள் தொடர்பான சர்ச்சையில் ஈடுபட்டுள்ள சமயத்தில், கோர் இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்படுகிறார். மறுபுறம், இந்தியாவும் சீனாவும் நெருக்கமாகி வருவதாகத் தெரிகிறது.

“இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராகவும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதராகவும் செர்ஜியோ கோரை நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் தெரிவித்தார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

“அதிபர் பணியாளர் இயக்குநராக, செர்ஜியோவும் அவரது குழுவும் நமது மத்திய அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையிலும் கிட்டத்தட்ட 4,000 ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ ஆதரவாளர்களை மிகக் குறைவான நேரத்தில் பணியமர்த்தியுள்ளனர். செனட் சபை உறுதிப்படுத்தும் வரை, வெள்ளை மாளிகையில் செர்ஜியோ தனது தற்போதைய பணியைத் தொடர்வார்.”

செர்ஜியோ கோரை நியமித்தது ஏன்? டிரம்ப் விளக்கம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டொனால்ட் டிரம்புடனான சந்திப்பில் செர்ஜியோ கோர் (வலது)”செர்ஜியோ பல வருடங்களாக என்னுடன் இருக்கும் ஒரு நல்ல நண்பர். அவர் எனது வரலாற்றுச் சிறப்புமிக்க அதிபர் தேர்தல் பிரசாரங்களில் பணியாற்றினார், எனது அதிகம் விற்பனையாகும் புத்தகங்களை வெளியிட்டார். எங்கள் இயக்கத்தை ஆதரிக்கும் பணிகளை சிறப்பாகச் செய்தார்” என்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்துள்ளார்.

“உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட பிராந்தியமான தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் நான் முழுமையாக நம்பக்கூடிய ஒருவர் எனக்குத் தேவை. அவர் ‘அமெரிக்காவை மீண்டும் சிறப்பான நாடாக மாற்ற வேண்டுமென்ற’ எனது லட்சியத்தை முன்னெடுத்துச் செல்ல உதவுவார். செர்ஜியோ ஒரு அற்புதமான தூதராக இருப்பார். வாழ்த்துகள், செர்ஜியோ!” என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

“இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராகவும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதராகவும் என்னைப் பரிந்துரைக்கும் அளவுக்கு, அதிபர் டிரம்ப் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய கௌரவமாகும்” என்று கோர் தெரிவித்தார்.

கோர் தொடர்பான சர்ச்சைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுத்துள்ளார்.கோரின் அணுகுமுறை சர்ச்சைக்குரியதாக உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் உடனான டிரம்பின் மோதலில், கோருக்கும் பங்கு உள்ளதாக நம்பப்படுகிறது.

மஸ்க், கோரை ஒரு ‘பாம்பு’ என்று விவரித்தார். அமெரிக்காவில் சிலர் கோரை டிரம்பின் ‘வலது கை’ என்று கூட அழைக்கிறார்கள்.

கோர், ஆயிரக்கணக்கான நிர்வாக நியமனங்களுக்கான சரிபார்ப்பு செயல்முறையை நடத்தியுள்ள போதிலும், தனது ‘பின்னணி சரிபார்ப்பு’ ஆவணங்களை தாக்கல் செய்வதை அவர் தாமதப்படுத்துவதாகவும் செய்திகள் வெளியாகின.

பட மூலாதாரம், TRUTH SOCIAL

படக்குறிப்பு, ட்ரூத் சோஷியலில் செர்ஜியோவை பரிந்துரைப்பது குறித்த தகவலை டிரம்ப் வழங்கியுள்ளார்.கோரின் தன்னிச்சையான முடிவுகள் தொடர்பாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அமெரிக்க செய்தித்தாளான நியூயார்க் டைம்ஸ் படி, “மஸ்க்கின் நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான ஜாரெட் ஐசக்மேன் ஜனநாயகக் கட்சியினருக்கு பணம் கொடுத்ததாகவும் கோர் டிரம்பிடம் தெரிவித்திருந்தார்.”

“மஸ்க்கின் பரிந்துரையின் பேரில், 2024ஆம் ஆண்டின் இறுதியில் ஐசக்மேனை நாசாவின் தலைவராக நியமிக்க டிரம்ப் முடிவு செய்திருந்தார். ஆனால் கோர் அளித்த தகவலுக்குப் பிறகு, டிரம்ப் ஐசக்மேன் நியமன முன்மொழிவை செனட்டில் இருந்து திரும்பப் பெற்றார்.”

“முன்னதாக 2024ஆம் ஆண்டு நடந்த ஒரு சந்திப்பில் ஐசக்மேனே இந்த ‘நன்கொடை விவகாரம்’ குறித்து டிரம்பிடம் தெரிவித்திருந்தார். ஆனால், தான் முதல் முறையாகவே இந்த விவகாரம் குறித்து அறிவதாக டிரம்ப் கூறினார்.”

கோரின் நியமனம் இந்தியாவிற்கு ஏன் முக்கியமானது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வரி விதிப்பு தொடர்பாக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பதற்றம் நிலவுகிறது.இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நேரத்தில், இந்தியாவுக்கான தூதராக கோரின் நியமனம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

டொனால்ட் டிரம்ப் அறிவித்த 50 சதவீத வரி அச்சுறுத்தலை இந்தியா எதிர்கொள்கிறது. இது ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வரும்.

கோரின் நியமனத்தை அமெரிக்க செனட் சபை எவ்வளவு விரைவாக அங்கீகரிக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் விரைவில் நியமிக்கப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

ஜனவரி மாதம் எரிக் கார்செட்டி இந்தியாவை விட்டு வெளியேறியதிலிருந்து இந்தப் பதவி காலியாகவே உள்ளது.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காக அமெரிக்க நிர்வாகத்தால் இந்தியா தொடர்ந்து குறிவைக்கப்பட்டு வருவதால், புதிய அமெரிக்க தூதரின் பணி மிகவும் சவாலானதாக இருக்கும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.”இந்தியாவுக்கான எங்கள் அடுத்த தூதராக அதிபர் கோரை பரிந்துரைத்தது என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறது. அவர் அமெரிக்காவின் சிறந்த பிரதிநிதியாக இருப்பார், குறிப்பாக இந்தியாவுடனான உறவு நமது உலகின் மிக முக்கியமான உறவுகளில் ஒன்றாகும்.” என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ கூறினார்.

இதற்கிடையில், தெற்காசிய விவகாரங்கள் தொடர்பான ஆய்வாளர் மைக்கேல் குகல்மேன் சமூக ஊடக தளமான எக்ஸ்-இல், “கோரின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டு, இந்தியாவுக்கான தூதராகவும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதராகவும் செயல்பட்டால், இந்தியா-பாகிஸ்தான் என இரண்டு நாடுகளையும் ஒரே நிலையில் பார்க்கும் கொள்கை மீண்டும் திரும்பிவிட்டது என்று கருதப்படும்.” என்று கூறியுள்ளார்.

“இந்த நடவடிக்கையின் மூலம் இந்தியாவுடனான உறவுகளின் முக்கியத்துவத்தைப் பற்றிய ஒரு செய்தியை அமெரிக்கா தெரிவிக்க விரும்புகிறது என்பது மற்றொரு கருத்து. ஏனெனில் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான சிறப்புத் தூதர் நேரடியாக டெல்லியில் பணியமர்த்தப்படுகிறார்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதராக அமெரிக்கத் தூதரை நியமிப்பது புதிய விஷயம்.

யார் இந்த கோர்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட்டுடன் செர்ஜியோ கோர். இந்தியா மீது விரைவில் இரண்டாம் நிலை வரிகள் விதிக்கப்படும் என்று ஸ்காட் பெசன்ட் கூறியிருந்தார்.கோருக்கு 39 வயது. அவர் இந்தியாவிற்கான இளைய அமெரிக்க தூதராக இருப்பார். கோரின் குடும்பப் பெயர் கோரோகோவ்ஸ்கி. அவர் 1986இல் அப்போதைய சோவியத் யூனியனின் உஸ்பெகிஸ்தானில் பிறந்தார்.

அவரது குடும்பம் 1999இல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தது. அப்போது அவருக்கு 12 வயது.

அவரது தந்தை யூரி கோரோகோவ்ஸ்கி ஒரு விமானப் பொறியாளர், அவர் சோவியத் ராணுவத்திற்காக விமானங்களை வடிவமைத்தார். கோரின் தாயார் இஸ்ரேலிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

கோர் லாஸ் ஏஞ்சல்ஸின் புறநகர்ப் பகுதியில் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார், பின்னர் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் தனது உயர் கல்வியைத் தொடர்ந்தார்.

2008ஆம் ஆண்டு குடியரசுக் கட்சி செனட்டரும் அதிபர் வேட்பாளருமான ஜான் மெக்கெய்ன், ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளரான பாரக் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்ட போது, ​​ஜானின் பிரச்சாரத்தில் கோர் முக்கிய பங்கு வகித்தார்.

முந்தைய அமெரிக்க தூதர் குறித்த சர்ச்சை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எரிக் கார்செட்டிஅமெரிக்கா, 2023ஆம் ஆண்டு முன்னாள் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் எரிக் கார்செட்டியை இந்தியாவுக்கான தூதராக நியமித்தது. ஜூலை 2021இல் பைடன் அரசாங்கம் அவரை இந்தப் பதவிக்கு பரிந்துரைத்தது.

பைடனின் நெருங்கிய நண்பர் கார்செட்டி. ஆனால், கார்செட்டி மேயராக இருந்தபோது அவருடைய நெருங்கிய உதவியாளருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் புகார்களை அவர் புறக்கணித்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்தியாவுக்கான தூதராக அவரது நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது.

கார்செட்டி இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

இறுதியில் செனட் அவரது நியமனத்தை 52க்கு 42 என்ற வாக்குகளால் அங்கீகரித்தது.

இருப்பினும், சில ஜனநாயகக் கட்சியினர் அவரது நியமனத்தை ஆதரிக்கவில்லை, இந்த நியமனத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

You may also like