Saturday, August 23, 2025
Home tamil newsவேல்ஸின் கார்டிஃப்பில் இலங்கைப் பெண் படுகொலை! – Global Tamil News

வேல்ஸின் கார்டிஃப்பில் இலங்கைப் பெண் படுகொலை! – Global Tamil News

by ilankai
0 comments

ஐக்கிய இராச்சியத்தின் வேல்ஸின் கார்டிஃப் நகரில் வசித்து வந்த இலங்கைப் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 32 வயதான தோன நிரோதா கல்பனி நிவுன்ஹெல்ல என அடையாளம் காணப்பட்டுள்ளதாக South Wales காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி காலை 7:37 மணிக்கு அவசர சேவைகளுக்கு வந்த அழைப்பைத் தொடர்ந்து ரிவர்சைடின் தெற்கு மோர்கன் பகுதிக்கு காவற்துறையினர்  அழைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு பெண்ணொருவர் படுகாயங்களுடன் விழுந்து கிடந்துள்ளார்.

சுகாதர தரப்பினரால் சம்பவ இடத்திலேயே அவருக்கு சிகிச்சை அளித்த போதிலும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

banner

சம்பவம் தொடர்பாக அருகிலுள்ள பகுதியிலிருந்து 37 வயதான மற்றொரு இலங்கையர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இறந்த பெண்ணுடன் அறிமுகமாகியிருந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், குற்றம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நிரோத கல்பானியின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர், 37 வயதான திசர வேரகல என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவற்துறையினர்  மேலும் தெரிவிக்கின்றனர்.

You may also like