கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டுள்ளார் என வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன உறுதிப்படுத்தினார்.
வைத்தியர்களின் ஆலோனைக்கமைய, ரணில் விக்ரமசிங்க தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் (22.08.25) நீதிமன்ற உத்தரவுக்கமைய, விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நேற்றிரவு மருத்துவர்களின் ஆலோசனைக்கமைய, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.