Saturday, August 23, 2025
Home tamil newsகொட்டடி பகுதியில் ஆயுதங்கள் மீட்பு! – Global Tamil News

கொட்டடி பகுதியில் ஆயுதங்கள் மீட்பு! – Global Tamil News

by ilankai
0 comments

யாழில் வீடொன்றின் வளவில் இருந்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (22.08.25) கப்பட்டுள்ளது.

கொட்டடி பகுதியில் உள்ள வீடொன்றில் மலசல கூடத்திற்கு குழி வெட்டிய போது, சந்தேகத்திற்கு இடமான பொதி காணப்பட்டமையால், அது தொடர்பில் காவற்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது.

காவற்துறையினர் சென்று பொதியினை பார்வையிட்ட பின்னர், அது தொடர்பில் யாழ்.நீதாவன் நீதிமன்று அறிவித்து, அகழ்வு பணிக்கு அனுமதி பெற்றனர்.

அந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நீதவான் ஏ.ஏ. ஆனந்தராசா முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு பொதிகள் மீட்கப்பட்ன.

banner

குறித்த பொதிகளில் இருந்து ரி – 56 ரக துப்பாக்கிகள் 30 மற்றும் அவற்றுக்குரிய 5ஆயிரம் ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த ஆயுதங்கள் காவற்துறையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

You may also like