இனி ஆன்லைன் கேம்களை விளையாட முடியாதா? -புதிய சட்டம் சொல்வது என்ன?காணொளிக் குறிப்பு, Text on Screen – சட்டம் கொண்டு வரப்பட்டது ஏன்?இனி ஆன்லைன் கேம்களை விளையாட முடியாதா? -புதிய சட்டம் சொல்வது என்ன?
52 நிமிடங்களுக்கு முன்னர்
வீட்டில் இருந்தபடியே, ஆன்லைன் கேம் மூலம் லட்சங்களில், கோடிகளில் பணம் சம்பாதிக்க வேண்டும் என கனவு காண்பவரா நீங்கள்? இந்த காணொளி உங்களுக்குதான்.
Online Gaming தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறிய ஆன்லைன் கேமிங்கை ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துவிட்டதால் தற்போது அது சட்டமாகி உள்ளது. இதன் மூலம் பல பணம் சார்ந்த ஆன்லைன் விளையாட்டுகள் மீது கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளது. சில விளையாட்டுகளுக்கு தடையும் விதிக்கப்படலாம்.
சரி, இந்திய அரசு ஏன் இந்த சட்டத்தை கொண்டு வந்தது? ஆன்லைன் கேம்ஸ் விளையாடுபவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்களா?
இந்த சட்டம் பணம் சார்ந்த விளையாட்டுகளை முழுமையாகத் தடை செய்கிறது. திறமை அடிப்படையோ, அதிர்ஷ்ட அடிப்படையோ எதுவாக இருந்தாலும் இனி பண முதலீட்டுடன் விளையாடுவது சட்டவிரோதம்.
இதுபோன்ற ஆன்லைன் கேம்ஸை விளையாடுவது மட்டுமின்றி, விளம்பரப்படுத்துவதும் இனி சட்டவிரோதமாகக் கருதப்படும். அதேபோல இது தொடர்பான பணத்தை நிர்வகிப்பதும் இனி சட்டவிரோதமானதே.
மேலதிக விவரங்கள் காணொளியில்
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு