காணொளி: த.வெ.க. இரண்டாவது மாநில மாநாடு எப்படி இருந்தது?- தொண்டர்களின் கருத்துகாணொளிக் குறிப்பு, தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு எப்படி இருந்தது? தவெக தொண்டர்களின் கருத்துகாணொளி: த.வெ.க. இரண்டாவது மாநில மாநாடு எப்படி இருந்தது?- தொண்டர்களின் கருத்து
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரபத்தி என்ற இடத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21 அன்று நடைபெற்றது.
மாநாட்டுக்கு சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரள்வதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டால், அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளில் காவல்துறையும் தவெக நிர்வாகிகளும் ஈடுபட்டனர்.
மாநாட்டின் முதல்நாள் இரவே மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதற்கேற்ப வாகன நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
ஆனால், மாநாடு நடைபெறும் இடத்துக்கு வருவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாகக் கூறுகிறார், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து வந்திருந்த தவெக தொண்டர் கார்த்திக்.
கடும் வெயிலின் தாக்கம் இருக்கலாம் எனக் கூறப்பட்டதால், முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் வர வேண்டாம் என தவெக தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், அதையும் மீறி நடிகர் விஜயை பார்க்கும் ஆர்வத்தில் குழந்தைகளுடன் வந்ததாக மாநாட்டுக்கு வந்த பெண்கள் தெரிவித்தனர்.
முழு விவரம் காணொளியில்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு