கடையடைப்பு:காவல்துறையில் முறைப்பாடு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தலைமையில் சங்கு கூட்டணி கடையடைப்புக்கு தயாராகி வருவதாக பொய்யான தகவல்களை சமூக ஊடகங்களில் வெளியிட்ட நபர் ஒருவர் மீது காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது.
முறையாக மற்றைய கட்சிகளுடன் பேசி, பல கட்சிகளின் சங்கங்களின் ஆதரவையும் பெற்று திகதி கதவடைப்பு திகதி பின்னர் அறிவிக்கப்படுமெனவும் பிரச்சாரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளரென நம்பப்படும் குறித்த நபருக்கெதிராகவே முறைப்பாடு காவல்துறையில் செய்யப்பட்டுள்ளது.