Thursday, August 21, 2025
Home வவுனியாவவுனியா இளைஞர்ளை தேடும் பொலிஸ் – கைகுண்டுகளுடன் தலைமறைவானவர்களாம்

வவுனியா இளைஞர்ளை தேடும் பொலிஸ் – கைகுண்டுகளுடன் தலைமறைவானவர்களாம்

by ilankai
0 comments

கைக்குண்டுகளை வைத்திருந்ததாகவும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும்  மூவர் மீது சந்தேகம்  நிலவுவதாகவும் சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

T-56 துப்பாக்கியுடன் பயணித்த வவுனியாவை சேர்ந்த நபர் ஒருவர் கிரிபத்கொடை பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 

சந்தேக நபரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வவுனியா பிரிவு குற்றத் தடுப்பு பணியக அதிகாரிகள் கடந்த 21 ஆம் திகதி கைக்குண்டுகளுடன் மற்றொரு சந்தேக நபரைக் கைது செய்தனர். 

இந்நிலையில் , பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்ய வவுனியா பகுதிக்குச் சென்றிருந்த போது, மூவரும் வவுனியா பகுதியில் இருந்து தப்பியோடியுள்ளதால், அவர்களை கைது செய்ய பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாகவும், குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.  

banner

மக்கள், சந்தேக நபர்களைக் குறித்து தகவல் அறிந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் பொறுப்பதிகாரி விசாரணை பிரிவு – 071-8596150 அல்லதுபொறுப்பதிகாரி – பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு – 071-8591966  என்ற தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You may also like