Thursday, August 21, 2025
Home இலங்கைநாயணத்தாள் அச்சிடப்பட்டதா?

நாயணத்தாள் அச்சிடப்பட்டதா?

by ilankai
0 comments

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (21) சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

விரிவாக்கப்பட்ட பண விநியோகம் குறித்த உண்மைகளை முன்வைக்க இலங்கை மத்திய வங்கியை அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் தமது கடிதத்தின் ஊடாக கோரியுள்ளார்.

அரசாங்கம் புதிய நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளதாக மனித உரிமைகளுக்கான கேந்திர நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் அண்மையில் அறிக்கை ஒன்றை வௌியிட்டிருந்தார்.

அதனை கடந்த செவ்வாய்க்கிழமை பிரதி நிதியமைச்சர் அனில் ஜயந்த பாராளுமன்றத்தில் நிராகரித்திருந்தார்.

banner

தற்போதைய காலகாட்டத்தில் எந்தவொரு நாணய அச்சிடலிலும் அரசாங்கம் ஈடுபடவில்லை எனவும், அதற்கான சட்டரீதியான அனுமதி அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இலங்கை மத்திய வங்கியின் தலையீட்டினால் விரிவாக்கப்பட்ட பண விநியோகம் மூலமே இந்த பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனவே அதன் உண்மைகளை இலங்கை மத்திய வங்கி அரசாங்க நிதி பற்றிய குழுவில் தௌிவுப்படுத்த வேண்டும்.

அரசாங்கம் மற்றும் நிதியமைச்சின் அனுமதியின்றி புதிய நாணயத்தை இலங்கை மத்திய வங்கி அச்சிட்டு இருக்குமாயின் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனவே இலங்கை மத்திய வங்கியினை அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

You may also like