Thursday, August 21, 2025
Home முதன்மைச் செய்திகள்நல்லூர் தேர்: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

நல்லூர் தேர்: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

by ilankai
0 comments

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை காலை மிக சிறப்பாக இடம்பெற்றது.

நல்லூர் ஆலய மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக மகோற்சவ திருவிழாக்கள் மிக சிறப்பாக இடம்பெற்று வருகிறது. 

அந்நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 06.15 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.

தேர் திருவிழாவில் புலம்பெயர்நாடுகள் , மற்றும் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆறுமுக பெருமானின் அருட்காட்சியை கண்டுகளித்தனர்.

banner

தேர் திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதஷ்டை , அடியழித்தல் , கற்பூர சட்டி எடுத்தல் , காவடி எடுத்தல் என தமது நேர்த்திக்கடன்களை நிறைவு செய்தனர்.

நாளைய தினம் வெள்ளிக்கிழமை காலை 06.15 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , தீர்த்தோற்சவம் நடைபெறும். 

அதனை தொடர்ந்து மாலை 04.30 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று . கொடியிறக்கம் நடைபெறும். 

You may also like