Thursday, August 21, 2025
Home tamil newsநல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்திருவிழா! – Global Tamil News

நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்திருவிழா! – Global Tamil News

by ilankai
0 comments

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழாவான இன்று (21.08.25), முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் ஆரோகணித்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

இன்றைய தேர்த்திருவிழாவை காண்பதற்காக, நாட்டின் பல பாகங்களிலிருந்தும் குறிப்பாக வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் ஆலய வழாகத்தை அடைந்தனர்.

ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும், சிதறு தேங்காய் உடைத்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.

நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது. இன்று தேர் திருவிழா இடம்பெற்றதுடன் நாளைய தினம் காலை தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளதுடன், மாலை கொடியிறக்கம் நடைபெறவுள்ளது.

banner

நல்லூர் தேர் திருவிழாவை முன்னிட்டு யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

                     

Related

Spread the love

  இலங்கைதேர்திருவிழாநல்லூர் கந்தசுவாமி ஆலயம்யாழ்ப்பாணம்வள்ளி தெய்வானை சமேதரர்

You may also like