தவெக மாநாட்டில் விஜய் உரை
பட மூலாதாரம், TVK
7 நிமிடங்களுக்கு முன்னர்
(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றிய தொடங்கினார்.
‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற்று வருகிறது.
சுமார் 4 மணியளவில் மாநாட்டு மேடைக்கு வந்த விஜய் கட்சி கொடியை ஏற்றினர். அதற்கு முன்பு மாநாட்டு மேடையில் அமைக்கப்பட்டிருந்த பாதையில், விஜய் நடந்து சென்றபோது, தடுப்புகளை தாண்டி தொண்டர்கள் பலரும் அந்த பாதையிலேயே ஏறிவிட்டனர்.
மேடையில் அமந்திருந்த தனது தந்தை எஸ்.வி சந்திரசேகர், தாய் ஷோபனா ஆகியோரை விஜய் கட்டியணைத்தார். தன்னை பார்த்தவுடன் எழுந்து நின்ற இருவரையும் அமரும்படி விஜய் வற்புறுத்தினார். பின்னர் தவெகவினர் உறுதிமொழி ஏற்றனர்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இந்த மாநாட்டுக்காக கடந்த இரு தினங்களாகவே தவெக நிர்வாகிகள் மதுரைக்கு வந்துள்ளனர். அதேபோன்று, தொண்டர்களும் இன்று காலை முதலே மாநாடு நடைபெறும் இடத்துக்கு வந்தனர்.
பட மூலாதாரம், TVK
அந்த கட்-அவுட்டில் ‘வரலாறு’ திரும்புகிறது என எழுதப்பட்டுள்ளது. 1967, 1977க்கு இடையே 2026 என்றும் அதில் எழுதப்பட்டுள்ளது.
ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, தவெக மாநாட்டுக்கு வந்த அஜித் ரசிகர் – மாநாடு பற்றி தவெக தொண்டர்கள் கூறுவது என்ன?மயக்கமடைந்த தொண்டர்கள்
மாநாடு பகுதியில் வெயில் அதிகமாக இருப்பதால், தரைவிரிப்புகளை தொண்டர்கள் பந்தலாக மாற்றி பயன்படுத்தி வருகின்றனர். வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள சில வேப்பிலையையும் எடுத்து வந்ததை காண முடிந்தது.
வெயில் காரணமாக, சிலர் மயக்கம் அடைந்ததையும் காணொளிகள் வாயிலாக அறிய முடிந்தது. மேலும், குழந்தைகளை அழைத்து வந்த தொண்டர்கள் சிலரும் அங்கிருந்து வெளியேற முடியாமல் அவதியடைந்ததாக காணொளிகள் வெளியாகின.
முதல் மாநில மாநாட்டில் பேசியது என்ன?
மாநாட்டில் பேசிய விஜய், “கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டுக்கும் பிரிவினை இல்லை, இரண்டும் நமது இரண்டு கண்கள்,” என்றார்.
பட மூலாதாரம், PTI
படக்குறிப்பு, முதல் மாநாட்டில் விஜய் மேலும், “2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இருந்தாலும், நம்மோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரப் பகிர்வும் கொடுப்போம்,” என்றார்.
யாரையும் தாக்கி அரசியல் செய்யப் போவதில்லை என்றும், சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பணம் என்று பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் எதிர்க்கப் போவதாகத் தெரிவித்தார்.
“ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட ‘கலரைப்’ பூசி, ‘ஃபாசிசம்’ என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை-பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள். இந்த மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள்,” என்றார் அவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு