முன்னாள் அமைச்சர்களை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பில் அனுர காய்நகர்த்தல்களை முன்னெடுத்துவருகின்றது.அரசாங்கப் பணத்தில் நிதியளிக்கப்பட்டதாகக் கூறப்படும் வெளிநாட்டுப் பயணம் பற்றிய விசாரணை தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாளை வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
ரணிலின் லண்டன் பயணத்தின் ஒரு பகுதி தனிப்பட்ட காரணங்களுக்காக இருந்தது, ஆனால் தேசிய நிதியிலிருந்து நிதியளிக்கப்பட்டுள்ளது.
10 பேர் கொண்ட குழுவை உள்ளடக்கிய இந்தப் பயணத்திற்காக அரசாங்கத்திற்கு சுமார் ரூ.16.9 மில்லியன் செலவானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் முன்னாள் தனியார் செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடம் புலனாய்வாளர்கள் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனிடையே முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்ற அதிகாரிகள் இன்று மாலபேயில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றனர்.
அதே நேரத்தில் அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இலஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் சமர்ப்பணங்களைத் தொடர்ந்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் சேனாரத்னவைக் கைது செய்வதற்கான பிடியாணையைப் பிறப்பித்தது.
முன்னாள் அமைச்சர் பல அழைப்பாணைகளுக்கு பதிலளிக்கத் தவறிவிட்டார் என்றும், அவரது பதவிக் காலத்தில் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் குறித்து வாக்குமூலம் அளிப்பதைத் தவிர்த்துவிட்டார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.