முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு இராணுவத்தினரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
முத்துஐயன்கட்டு குளத்தில் இருந்து இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்றைய தினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது.
அதன் போது , சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கபப்ட்டிருந்த நான்கு இராணுவத்தினரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து , நால்வரின் விளக்கமறியலையும் நீதவான் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டார்.