இலங்கைத் தமிழ்ச் சூழலில் இயங்கிக் கொண்டிருக்கும் காத்திரமான ஓவியக் கலைஞர்களுள் ஒருவராக சு.நிர்மலவாசன் காணப்படுகிறார்.
இவருடைய படைப்பாக்கங்கள் தேசிய அளவிலும், பன்னாட்டு அளவிலும் அறியப்பட்டவைகளாகவும், சமூக ஆய்வாளர்களின் கவனங்களை ஈர்த்தவையாகவும் விளங்கி வருகின்றன.
2001 இல் மட்/புனித மிக்கேல் கல்லூரியின் உயர்தர மாணவனாகக் கற்ற போது தனது முதலாவது தனிநபர் ஓவியக் காட்சியை கல்லூரி மண்டபத்தில் நடத்தித் தன்னை இனங்காட்டிய சு.நிர்மலவாசன் எதிர்வரும் 30,31,01ஆந் தேதிகளில் மட்/ புனித மிக்கேல் கல்லூரியிலுள்ள சிற்றாலயத்தில் தனது 15 ஆவது தனிநபர் காண்பியக் கலைக் காட்சியை நடத்தவுள்ளார்.
ஓர் ஓவியக் கலைஞனாகவும், ஓவியக் கலைச் செயற்பாட்டாளனாகவும் செயலாற்றிக் கொண்டிருக்கும் சு.நிர்மலவாசனின் படைப்புகளைக் கண்டு களிப்போம்! அதனூடாக அவர் கூற வரும் கருத்துகளைக் கவனத்திற் கொள்வோம்!!
து.கெளரீஸ்வரன்,
15.08.2025.