அதிகாரிகள், அமைச்சருடன் இணைந்து, தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக அரைகுறை ஆடையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட தபால் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு போதுமான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதில் அதிகாரிகள் தவறிவிட்டதாலேயே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது.
எங்களது சீருடைக்கான கொடுப்பனவை அதிகரிக்கக் கோரியுள்ளோம். சைக்கிள்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரியுள்ளோம்.
அத்துடன், ஊழியர்களின் ஒப்பந்தங்களை நிரந்தரமாக்குமாறு கோரியுள்ளோம். ஆனால், அதிகாரிகளும், அமைச்சரும் கைரேகை மற்றும் மேலதிக நேரம் பற்றி பேசுகிறார்கள்.
சீருடைகளைத் தைப்பதற்காக 600 ரூபாவும் சைக்கிள்களுக்கான கொடுப்பனவாக 250 ரூபாவும் வழங்கப்படுகின்றது.
அஞ்சல் தொழிற்சங்கங்களால் நடத்தப்படும் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் குறித்து பொதுமக்களிடம் அதிகாரிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் எனத் தெரிவித்தார்.