பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், தீபக் மண்டல்பதவி, பிபிசி செய்தியாளர்18 ஆகஸ்ட் 2025, 02:39 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சிறுநீரகங்கள் நம் உடலில் ஒரே நேரத்தில் பல செயல்பாடுகளைச் செய்கின்றன. அவை உடலில் இருந்து கழிவுப்பொருட்களை அகற்றுகின்றன. திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கின்றன.

அவை ரத்த அழுத்தத்தைக் கண்காணித்து, ரத்த சிவப்பணுக்களை உருவாக்கவும் உதவுகின்றன. ஆனால் மக்கள் பெரும்பாலும் சிறுநீரக செயலிழப்பின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளைப் புறக்கணிக்கிறார்கள்.

இந்த அறிகுறிகள் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால், சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கான சிகிச்சையையும் சீக்கிரமாகவே தொடங்கலாம்.

நாம் பெரும்பாலும் கவனம் செலுத்தாத அந்த ஐந்து அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். இவை சிறுநீரக நோய் அல்லது சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.

1. சிறுநீர் அடிக்கடி கழித்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறுநீர் அடிக்கடி கழிப்பது சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம்.அடிக்கடி சிறுநீர் கழிப்பது சிறுநீரக செயலிழப்பின் அறிகுறியாக இருக்கலாம். இது பாலியூரியா என்று அழைக்கப்படுகிறது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

சிறுநீரகம் சேதமடைந்தால், தேவையானதை விட குறைவான சிறுநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. பெரும்பாலும், சிறுநீரில் நுரை வருவது இதன் அறிகுறியாகக் கூறப்படுகிறது.

“ஆனால் இது கட்டாயமில்லை, பிற நோய்களாலும் சிறுநீரில் நுரை வரலாம்” என்கிறார் சர் கங்காரம் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர், மருத்துவர் மொஹ்சின் வாலி.

2. உடலில் வீக்கம்

கண்கள் மற்றும் கால்களில் வீக்கம் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறியாக இருக்கலாம். கணுக்காலில் வீக்கம் இருந்தால், அதைப் புறக்கணிக்கக் கூடாது. இது சிறுநீரக நோயைக் குறிக்கிறது.

மணிப்பால் மருத்துவமனையின் சிறுநீரக மருத்துவர் கரிமா அகர்வால், “கால்கள் வீங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கண்கள், முகம் மற்றும் பாதங்களில் வீக்கம் சிறுநீரக நோயைக் குறிக்கிறது” என்று கூறுகிறார்.

3. ரத்த அழுத்தம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகங்களைப் பாதிக்கிறது.நிபுணர்களின் கூற்றுப்படி, “ரத்த அழுத்தம் என்பது இருமுனைக் கத்தி போல. உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகங்களைப் பாதிக்கிறது.”

சிறுநீரக செயலிழப்பு காரணமாக ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. எனவே, ரத்த அழுத்தம் குறித்து ஒருவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

“பல நேரங்களில் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படாமல், பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் அளவு அதிகரிக்கப்படுகிறது. இதுவும் சிறுநீரக நோயின் அறிகுறியாகும்” என்று மருத்துவர் கரிமா அகர்வால் கூறுகிறார்.

4. நீரிழிவு நோய்

நீரிழிவு நோயால் சிறுநீரகங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

சிறுநீரக நோயாளிகளில் 80 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் கரிமா அகர்வால் கூறுகிறார்.

நீரிழிவு நோயாளிகளில் 30 முதல் 40 சதவீதம் பேருக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரக நோய் உருவாகத் தொடங்கினால், அவர்களின் ரத்த சர்க்கரை அளவும் குறைகிறது.

உடலில் பல வருடங்களாக சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் காரணமாக சிறுநீரக நோய் உருவாகத் தொடங்குகிறது.

5. சோர்வு, அரிப்பு மற்றும் குமட்டல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறுநீரக நோயால் உடலில் பாஸ்பரஸ் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் உடலில் அரிப்பு ஏற்படுகிறது.சோர்வு, உடலில் அரிப்பு மற்றும் குமட்டல் ஆகியவை சிறுநீரக நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.

நிபுணர்களின் கூற்றுப்படி, உடலில் பாஸ்பரஸ் இல்லாததால் அரிப்பு ஏற்படுகிறது. சிறுநீரக நோய் உடலில் பாஸ்பரஸ் குறைபாட்டை ஏற்படுத்துகிறது.

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளுக்கு குமட்டல் ஏற்படத் தொடங்குகிறது. அவர்களுக்கு சாப்பிடுவதில் விருப்பம் இருக்காது.

சிறுநீரக நோயைத் தடுப்பதில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மிகவும் உதவியாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வழக்கமான உடற்பயிற்சி, போதுமான அளவு தண்ணீர் குடித்தல், உப்பு மற்றும் சர்க்கரையை குறைவாகப் பயன்படுத்துதல் ஆகியவை சிறுநீரக நோயைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

சிறுநீரக நோய் வராமல் தடுக்க 7 வழிமுறைகளை மருத்துவர் மொஹ்சின் வாலி மற்றும் மருத்துவர் கரிமா அகர்வால் இருவரும் பிபிசியிடம் தெரிவித்தனர்.

1. போதுமான தண்ணீர் குடிக்கவும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தில் நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. போதுமான அளவு தண்ணீர் குடிக்கும்போது, சிறுநீரகங்கள் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் கூறுகளை வெளியேற்ற போதுமான சிறுநீரை உற்பத்தி செய்கின்றன.

மேலும், சிறுநீரக கற்கள் மற்றும் தொற்றுகள் ஏற்படும் அபாயம் குறைகிறது. நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்தால், உங்கள் சிறுநீர் தெளிவாகவோ அல்லது வெளிர் மஞ்சள் நிறமாகவோ இருக்கும்.

பொதுவாக ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர் கரிமா அகர்வால் கூறுகிறார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.2. உப்பு குறைவாக எடுத்துக்கொள்ளுங்கள்

அதிகப்படியான உப்பு சிறுநீரகங்களுக்கு நல்லதல்ல, ஏனெனில் அது ரத்த அழுத்தத்தை அதிகரித்து சிறுநீரகங்களை சேதப்படுத்துகிறது.

ஊறுகாய், அப்பளம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்.

நூடுல்ஸ் போன்ற உணவுகளில் அதிக உப்பு உள்ளது. அவற்றைத் தவிர்க்கவும்.

3. பாறை உப்பைத் தவிர்க்கவும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாறை உப்பு சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.இப்போதெல்லாம் பாறை உப்பை (Rock Salt) உட்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது. ஆனால் உயர் ரத்த அழுத்த நோயாளிகள் பாறை உப்பை உட்கொள்ளக்கூடாது.

“சாதாரண உப்பை விட பாறை உப்பு ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பொதுவாக நம்பப்படுகிறது. அதில் பொட்டாசியம் குறைவாகவும் சோடியம் அதிகமாகவும் உள்ளது.” என்கிறார் மருத்துவர் மொஹ்சின் வாலி.

4. சர்க்கரையை குறைக்கவும்

சிறுநீரக நோய்களைத் தவிர்க்க விரும்பினால், இனிப்புகளைக் குறைவாகச் சாப்பிடுங்கள்.

சர்க்கரை சாப்பிடாமல் இருப்பது நல்லது. கேக், பிஸ்கட், பேஸ்ட்ரி மற்றும் கோலா போன்றவற்றில் பதப்படுத்தப்பட்ட சர்க்கரை உள்ளது.

சர்க்கரை உடல் பருமனை அதிகரித்து சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

5. எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள்

பட மூலாதாரம், Disney via Getty Images

படக்குறிப்பு, சிறுநீரக நோயைத் தவிர்க்க விரும்பினால், உடற்பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் எடையைக் கட்டுப்படுத்துங்கள்.பருமனான நபர்களுக்கு சிறுநீரக நோய் வருவதற்கான ஆபத்து அதிகம் இருப்பதால், அவர்கள் எடையைக் குறைக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

உங்கள் உடல் நிறை குறியீட்டெண் (BMI) குறைவாக இருக்க வேண்டும். அது 24க்கும் குறைவாக இருந்தால், அது மிகவும் நல்லது.

லேசான உடற்பயிற்சி செய்யுங்கள். இது மிகவும் முக்கியம். இது உடலின் வளர்சிதை மாற்றத்தை நன்றாக வைத்திருக்கும். இது நன்றாக இருந்தால், 50 வயதை எட்டும்போது, நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் குறையும்.

6. சமச்சீரான உணவை உண்ணுங்கள்

பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த உணவை உண்ணுங்கள். புரோபயாடிக் உணவுகள் ஆரோக்கியத்திற்கு நல்லது. அவற்றுக்கு முன்னுரிமை கொடுங்கள். வறுத்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

போதுமான அளவு தண்ணீர் உட்கொள்ளுதல்ல், சீரான உணவு மற்றும் உடற்பயிற்சி ஆகியவை சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

7. உங்கள் மருத்துவரிடம் கேட்காமல் மருந்து எடுத்துக்கொள்ளாதீர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்து எடுத்துக்கொள்ளாதீர்கள்.”மக்கள் பலரும் மருத்துவரிடம் ஆலோசிக்காமல் மருந்தகங்களில் இருந்து மருந்துகளை வாங்கி உட்கொள்கிறார்கள். பலர் வலி நிவாரணிகளை தாங்களாகவே எடுத்துக்கொள்கிறார்கள்” என்று மருத்துவர் கரிமா அகர்வால் கூறுகிறார்.

“முதியோர்கள் பெரும்பாலும் உடல் வலி மற்றும் மூட்டுவலிக்கு (ஆர்த்ரிட்டீஸ்) வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்கிறார்கள். சில மருந்துகளில் கன உலோகக் கூறுகள் மற்றும் ஸ்டீராய்டுகள் இருக்கலாம். இது சிறுநீரகங்களை சேதப்படுத்தும்.” என்று கூறுகிறார் கரிமா அகர்வால்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு