வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை எதிர்த்து இன்று தமிழரசு கட்சியால் விடுக்கப்பட்ட கதவடைப்பு வெற்றி தோல்வியின்றி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக  கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் கடையடைப்பிற்கு ஆதரவு வழங்காமல் பெரும்பாலான பகுதிகள் இயல்பு நிலையில் காணப்பட்டது.

கடையடைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்த 3 மணித்தியாலயத்தில் யாழ்ப்பாணத்தில் பிரதான இடங்களான யாழ் நகரப்பகுதி, பொதுச்சந்தை, மருதனார்மடம், சுன்னாகம், மல்லாகம், திருநெல்வேலி ஆகிய மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகள் இன்றும் வழமை போன்று இயங்கின.

எனினும் தமிழரசுக்கட்சி வசமுள்ள உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் தமது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் கடையடைப்பினை வெற்றி பெற வைக்க கடும் பிரயத்தனத்தில் குதித்திருந்தனர்.

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனால் அழைப்பு விடுக்கப்பட்ட கடையடைப்பு போராட்டமானது தன்னிச்சையாக தீர்மானிக்கப்பட்டதாக பலரும் குற்றச்சாட்டுக்களை முன்னெடுத்திருந்தனர்.

சமூக அமைப்புக்களுடன் கலந்துரையாடி முடிவெட்டப்படாமையால் எதிர்ப்பினை சில தரப்புக்கள் முன்வைத்திருந்தன.

எனினும் கிழக்கில் மட்டக்களப்பில் முழுமையான கதவடைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் ஏனைய பகுதிகளில் ஆதரவு வழங்குவது தொடர்பில் குழப்பநிலையே காணப்பட்டிருந்தது. 

புல இடங்களிலும் சுமூக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போதும் சில இடங்களில் குழப்ப நிலையே காணப்பட்டிருந்தது.