Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, H1B விசா மற்றும் அமெரிக்க குடியுரிமை வாங்குவது மிகவும் சவாலாக உள்ளது.எழுதியவர், தனிஷா சவுகான்பதவி, பிபிசி செய்தியாளர்2 மணி நேரங்களுக்கு முன்னர்
அமெரிக்காவிற்குச் செல்லவேண்டும் என்ற இந்தியர்களின் கனவும், அங்கேயே குடிபெயரவேண்டும் என்ற அவர்களின் ஆசையும் கடினமாகி வருகிறது. H1B விசா மற்றும் அமெரிக்க குடியுரிமை வாங்குவது மிகவும் சவாலாக உள்ளது.
டிரம்ப் அறிவித்துள்ள கோல்ட் கார்ட் (Gold Card) விசாவை வாங்குவதற்கு நீண்ட நாட்களாகும். மேலும் இதற்கு அதிகம் செலவாகும் என்பதால் இதை வாங்குவதும் கடினம்.
இதுபோன்ற சூழலில் இந்தியர்கள் EB-5 விசாவை நோக்கிப் படையெடுக்கின்றனர். சீனாவுக்குப் பிறகு EB-5 விசாவிற்காக அதிகம் பேர் விண்ணப்பித்தவர்களைக் கொண்ட நாடாக உள்ளது இந்தியா. மேலும் இந்த விசாவிற்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.
ஆனால் இந்தியர்களுக்கு அமெரிக்காவின் EB-5 விசா மீது அதிக ஆசை ஏற்பட்டுள்ளது ஏன்? டிரம்பின் கோல்ட் விசாவில் இருந்து இது எப்படி மாறுபடுகிறது? ஏனென்றால் EB-5 விசாவிற்கு மாற்று என கோல்ட் கார்ட்டை அறிவித்தார் டிரம்ப். இதைப்பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். ஆனால், அதற்கு முன்பாக EB-5 விசா என்றால் என்ன?
EB-5 விசாவின் தற்போதைய செயல்பாடு என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அமெரிக்காவில் பட்டம் பயின்ற மகிழ்ச்சியில் இந்திய மாணவியின் குடும்பம்.தற்போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அமெரிக்க கிரீன் கார்டை வாங்க விரும்பினால், அவர்களுக்கு EB-5 குடியேற்ற முதலீட்டாளர் விசா திட்டம் உதவுகிறது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
1990ஆம் ஆண்டு, முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக அமெரிக்க காங்கிரஸ் EB-5 விசா திட்டத்தை அறிமுகம் செய்தது.
அமெரிக்காவில் குறைந்தது 10 பேருக்காவது வேலை அளிக்கும் வகையில் 1 மில்லியன் டாலர் (சுமார் 8 கோடி ரூபாய்) முதலீடு செய்வோருக்காக இந்த EB-5 விசா திட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ், முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுக்கு ஈடாக உடனடியாக குடியுரிமை (க்ரீன் கார்ட்) பெறுவார்கள். அதே நேரம், பெரும்பாலானவர்கள் நிரந்தர குடியுரிமைக்காக விண்ணப்பித்து மாதங்கள் அல்லது வருடக் கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின்படி, EB-5 விசா திட்டத்தின் கீழ் ஒரு ஆண்டிற்கு 10,000 விசாக்கள் மட்டுமே வழங்கப்படும். அதிலும் அதிக வேலைவாய்ப்பின்மை உள்ள பகுதிகளில் முதலீடு செய்பவர்களுக்கு 3,000 விசாக்கள் ஒதுக்கப்படுகின்றன.
இந்தியர்கள் மத்தியில் EB-5 விசா ட்ரெண்ட் ஆவது ஏன்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வெளிநாட்டு மாணவர்களுக்கான விதிகளை இந்தாண்டு கடினமாக்கியுள்ளது அமெரிக்கா.சீனாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் அமெரிக்காவின் EB-5 விசாவிற்கான தேவை அதிகரித்துள்ளது.
இன்வெஸ்ட் இன் அமெரிக்காவின் (IIUSA) தரவுப்படி, இந்தியர்கள் மத்தியில் EB-5 விசாவிற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
2014 – 2024ஆம் ஆண்டு தரவுகளைப் பார்க்கையில், 2024ஆம் ஆண்டில் தேவை அதிகரித்திருப்பது தெரிகிறது.
2024ஆம் ஆண்டில் அதிகபட்சமாக இந்தியர்களுக்கு 1428 EB-5 விசா வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக 2022ல், 1382 விசாக்களும், பின் 2023ல் 815 EB-5 வகை விசாக்களும் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டுகளில் குறைவாகவே இருந்தது.
2014ஆம் ஆண்டில் 96, 2015ல் 111, 2016ல் 149, 2017ல் 174, 2018ல் 585, 2019ல் 760, 2020ல் 613, 2021ல் 211 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
IIUSA-வில் கொள்கை ஆராய்ச்சி இயக்குநர் மற்றும் தரவு ஆய்வாளராக உள்ள லீ லாய் கூறுகையில், “EB-2 மற்றும் EB-3 விசாக்களுடன் ஒப்பிடுகையில் EB-5 விசா தான் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான வேகமான வழியாகும். EB-2 மற்றும் EB-3 விசாக்களை பெற ஏற்கனவே நிறைய இந்தியர்கள் காத்திருக்கின்றனர்.”
EB-5 விசா உடைய முதலீட்டாளர்கள் வேலைவாய்ப்பு அங்கீகாரம் மற்றும் பயண அனுமதிக்கு ஒன்றாகவே விண்ணப்பிக்கலாம்.
EB-2 மற்றும் EB-3 விசாக்கள் மூலம் அமெரிக்காவில் வசித்து, கிரீன் கார்டுக்காகக் காத்திருக்கும் இந்தியர்களுக்கு இது பெரியளவில் உதவும்.
எந்த வகை விசாவிற்கு மவுசு அதிகம்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, EB-5 விசா தேவையால் கட்-ஆஃப் தேதிகளும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன.IIUSA வலைதளத்தின்படி, இந்தியா, சீனாவில் இருந்து முன்பதிவு செய்யப்படாத (unreserved) பிரிவில் அதிகரித்துள்ள EB-5 விசா தேவையால் கட்-ஆஃப் தேதிகளும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன.
முன்பதிவு செய்யப்படாத பிரிவில் இருக்கும் இந்திய விண்ணப்பதாரர்களுக்கான காத்திருப்பு காலம் 198 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது விசா வழங்குவதற்கான நேரம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதைத்தாண்டி, மீதமுள்ள மற்ற முன்பதிவு பிரிவுகளின் நிலை நன்றாகவே உள்ளது. அவர்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
முன்பதிவு பிரிவுகள் என்பது ஒரு சிறப்பு வகை விசா வழங்கப்படும் போது, கிராமப்புற, அதிக வேலையின்மை மற்றும் உள்கட்டமைப்பு பிரிவுகள் இதில் அடங்கும்.
அனைத்து விண்ணப்பதாரர்களும் முன்பதிவு செய்யப்படாத பிரிவில்தான் சேர்க்கப்படுவர். இது குறிப்பிட்ட பிரிவுகளுக்கென ஒதுக்கப்படவில்லை.
டிரம்பின் கோல்ட் கார்ட் என்றால் என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கோல்ட் கார்ட் அதிகம் பேசப்பட்ட ஒன்றாகும். தற்போது இதற்கென பிரத்யேகமாக வலைதளமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் உங்களின் விவரங்களை பதிவேற்றினால், விண்ணப்பிப்பதற்கான நேரம் வருகையில் அறிவிப்பு வெளியாகும்.
கோல்ட் கார்ட் என்பது பணக்கார முதலீட்டாளர்களுக்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிமுகப்படுத்தியதாகும். இது அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறுவதற்கான வாய்ப்பை அளிக்கிறது.
இந்த கோல்ட் கார்டின் விலை 5 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 43.52 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த கோல்ட் கார்ட் பெறுவதன் மூலம் நிரந்தரமாக அங்கேயே தங்கி வேலை பார்ப்பதற்கான உரிமையை பெற முடியும். அதனால் அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான வழி சுலபமாகிறது.
கோல்ட் கார்டை அறிமுகப்படுத்தியபோது அதிபர் டிரம்ப் கூறியதாவது, “அவர்கள் பணக்காரர்களாகவும், வெற்றியாளர்களாவும் இருப்பர். அவர்கள் நிறைய செலவழிப்பார்கள், நிறைய வரி செலுத்துவார்கள் மேலும் நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவார்கள். இது பெரியளவில் வெற்றி பெரும் என நாங்கள் நினைக்கிறோம்”
“வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விசா வழங்கும் இந்த வகையிலான இந்த ‘கோல்ட் கார்ட்’ தற்போதைய EB-5 முதலீட்டாளர் விசா திட்டத்திற்கு மாற்றாக இருக்கும்” என அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹாவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.
கோல்ட் கார்ட்டின் மதிப்பு என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அமெரிக்க அரசு வழங்கும் கோல்ட் கார்ட்டை அனைவராலும் வாங்க இயலாது.EB-5 விசாவிற்கான தேவை அதிகரித்திருப்பதாக க்ரீன் கார்ட் நிதியின் இணை நிறுவனர் கிரிஷ் படேலும் தெரிவிக்கிறார். இந்த தேவை பெரும்பாலும் அமெரிக்காவில் வேலைபார்க்கும் அல்லது படிக்கும் பிள்ளைகளின் குடும்பத்தினரிடம் தான் அதிகம் உள்ளது என கிரிஷ் பிபிசியிடம் தகவலைப் பகிர்ந்தார்.
கடந்த மாதம் கூட ஆபதாபாத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் EB-5 விசா குறித்து தன்னிடம் விசாரித்ததாக அவர் கூறுகிறார். அவரின் மருமகன் நியூயார்க்கில் இருக்கிறார். அவரின் H1B விசாவிற்கான காலக்கெடு விரைவில் முடிவடைய உள்ளது. அதனால் விசா பற்றிய கவலை அவரிடம் தெளிவாக தெரிந்தது என்றார்.
“டிரம்பின் கோல்ட் கார்ட்டை பொருத்தவரை, அது விலை உயர்ந்ததாக இருப்பதால், மக்கள் இதன் மேல் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. அரசியல் ரீதியாக இது வேலை செய்தாலும், யதார்த்தத்தில் மக்களுக்கு இதில் ஆர்வம் இல்லை. உண்மையிலேயே முதலீடு செய்ய விரும்புவோர் EB-5 விசாவிற்கே விண்ணப்பிக்கப் பார்க்கின்றனர்.”
தற்போது EB-5 குடியேற்ற விசா திட்டத்திற்கு என்ன ஆகும்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டெல்லி விமான நிலையம்டொனால்ட் டிரம்ப் எப்போதும் இந்த EB-5 விசா திட்டத்தை எதிர்த்தார். இதை பழைய மற்றும் பயனற்ற திட்டம் என்றும் குறிப்பிட்டார்.
டிரம்ப் கோல்ட் கார்ட் விசாவை அறிமுகப்படுத்தியபோது, அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹாவர்ட் லுட்னிக்கும் உடன் இருந்தார்.
“EB-5 போன்ற பயனற்ற திட்டத்தை நடத்துவதற்கு பதிலாக, நாங்கள் அதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக டிரம்ப் கோல்ட் கார்ட்டை அறிமுகம் செய்கிறோம்” என அவர் தெளிவுபடுத்தினார்.
லுட்னிக்கைப் பொருத்தவரை, “EB-5 விசா திட்டம் குறைபாடுடையது, ஜோடிக்கப்பட்டது மற்றும் முழுக்க முழுக்க மோசடியான ஒன்றாகும். குறைந்த விலையில் குடியுரிமை பெறுவதற்கான வழி, அதனால் பகுத்தறிவற்ற ஒரு திட்டத்தை மேற்கொள்வதை விட, அதை நிறுத்தி விடுவது நல்லது என அதிபர் கூறினார்.”
முன்னதாக அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமைப் பெற, சுமார் 100,000 டாலர் வரை தேவைப்பட்டது. தற்போது 5 மில்லியன் டாலர், இந்திய மதிப்பில் சுமார் 42 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அதாவது பணக்கார இந்தியர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் உதவுவதுபோல் உள்ளது.
H1B அல்லது EB2/EB3 விசாக்கள் மூலம் அமெரிக்காவில் வசிப்பவர்கள் கோல்ட் கார்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், அவர்களிடம் 5 மில்லியன் டாலர் இருக்க வேண்டும்.
எனினும், விண்ணப்பதாரர் 5 மில்லியன் டாலர்கள் செலுத்திய பிறகு தான் விசா உறுதி செய்யப்படும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு