யாழ்ப்பாணத்தில் வாகன சுத்திகரிப்பு நிலையத்தில் வேலை செய்து வந்த  சங்கரத்தை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய அருள்ஜீவன் பிரசாத்  எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான்.  ஆறுகால்மடம் பகுதியில் உள்ள வாகன சுத்திகரிப்பு நிலையத்தில் வேலை செய்து வந்த சிறுவன் நேற்றைய தினம்  சனிக்கிழமை (16.08.25)  வாகன சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளை , எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியுள்ளது. அதனால் சிறுவன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளான்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற காவற்துறையினர் சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்ததுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.