காலை நேரம் மட்டும் ஹர்த்தால்?

ஹர்த்தால் போராட்டம் தொடர்பில் முரண்பாடான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்ற நிலையில் நாளை காலை நேரம் மட்டும் ஹர்த்தால் என பின்வாங்கியுள்ளது எம்.ஏ.சுமந்திரன் அணி. 

ஹர்த்தாலை வெற்றி பெற வைக்க எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு உள்ளுராட்சி சபைகளது தலைவர்கள் கடுமையாக பாடுபட்டுவருகின்றனர்.அதிலும் கடை கடையாக ஆதரவு கோரிவர மறுபுறம் யாழ்.மாநகரசபை முதல்வரோ கௌரவம் பார்க்காமல் வர்த்தக சங்கத்திற்கு நேரில் சென்று ஆதரவு கோரியுள்ளார்.

இதனிடையே ஹர்த்தால் காரணமாக வழமையாக திங்கட்கிழமைகளில் நடைபெறும்  மக்கள் சந்திப்பு நாளை இடமபெறமாட்டாதென சில தவிசாளர்கள் அறிவித்துள்ளனர்.