Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
“பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்பதே எமது அரசின் நிலைப்பாடாகும். எனவே, நாம் அதனை மாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்” என போக்குவரத்து,நெடுஞ்சாலைகள்,சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் இன்று (17.08.25) இடம்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
இந்த நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டதே எமது கட்சியின்
அரசியல் எழுச்சியை தடை செய்ய வேண்டும் என்பதற்காகவே எனவே இச் சட்டத்தை பற்றி நாம் நன்கு அறிந்துள்ளோம் எனவே பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதே எமது அரசின் நோக்கம் எனத் தெரிவித்தார்.
பயங்கரவாத தடுப்பு பிரிவு ஊடகவியலாளர்கள் இன்றும் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்படும் சூழ் நிலைகள் தொடர்ந்து நிலவுகிறது இன்றும் (17) முல்லைத்தீவு ஊடகவியலாளர் குமணன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் இந்த நிலைமை ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் செயற்பாடாக காணப்படுகிறது என கேள்வி எழுப்பிய போது பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்ட விடயம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்றும் குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர் குமணனிடம் ஏழு மணித்தியாலம் விசாரணை!
முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணன் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றக்கிழமை (17) அன்று காலை 9.30 மணிக்கு அவர் முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் பொலிஸ் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் விசாரணைக்காக சென்றார்.
விசாரணைக்காக அழைக்கப்பட்ட குமணன் சட்டத்தரணி நடராசா காண்டீபனுடன் அளம்பில் பொலிஸ் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில் விசாரணைக்காக சென்ற நிலையில் சுமார் பத்து மணியளவில் ஆரம்பித்த விசாரணை சுமார் ஏழு மணித்தியாலங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது.