Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மன்னார் மற்றும் பூநகரியில் காற்றாலை மின் சக்திக்கென அதானி பெருமளவு நிதியை அள்ளிவீசியுள்ள நிலையில் மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்காக அதானி குழுமம் செலுத்திய திரும்பப்பெறக்கூடிய வைப்புத்தொகையை மட்டுமே அரசாங்கம் திருப்பி கொடுக்கும் என எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
அரசு தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது, அதானி குழுமம் இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபைக்கு இந்த திட்டம் தொடர்பாக வைப்புத்தொகையை செலுத்தியுள்ளது.
காற்றாலை மின் திட்டத்திலிருந்து அதானி குழுமம் விலகியைதை தொடர்ந்து, அரசாங்கத்திடமிருந்து ஆரம்ப செலவுகளைக் கோரியதா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, எந்தவொரு திட்டமும் திரும்பப்பெறக்கூடிய மற்றும் திரும்பப்பெற முடியாத வைப்புத்தொகைகளை உள்ளடக்கியது என சுட்டிக்காட்டிய அமைச்சர், அரசாங்கம் திரும்பப்பெறக்கூடிய வைப்புத்தொகைகளை மட்டுமே திருப்பிச் செலுத்தும் என கூறியுள்ளார்.
இந்த நிலையில், திரும்பப்பெறக்கூடிய வைப்புத்தொகைகள் எவை என்பதை தீர்மானிக்க நிலைபெறுதகு சக்தி அதிகாரசபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்கொடி மேலும் தெரிவித்துள்ளார்.