Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
எம்.ஏ.சுமந்திரன் அறிவித்த கதவடைப்புக்கு ஆதரவளிக்கமாட்டோம் என யாழ்ப்பாண வர்த்தகர் சங்கத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ் மாநகரசபை முதல்வர் வி.மதிவதனி இன்று யாழ். வர்த்தகர் சங்கத்தினரை சந்தித்து பேசிய போது, வர்த்தகர்கள் இதனை தெரிவித்தனர்.
அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைத்து கதவடைப்பு அறிவிக்கப்படவில்லை, கதவடைப்பினால் நாளாந்த கூலித் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள், வர்த்தகர்களின் வர்த்தகம் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், வெளிநாட்டவர் வரும் சமயத்தில் வர்த்தகம் ஓரளவு நடைபெற்று வரும் நிலையில் கதவடைப்பை மேற்கொள்வது பொருத்தமற்றது என பல காரணங்களை கூறி, கதவடைப்பை ஆதரிக்க முடியாது என தெரிவித்தனர்.