நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழாவான இன்றைய தினம் சனிக்கிழமை மாலை கார்த்திகை திருவிழா நடைபெற்றது. மாலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , முருக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் பூஞ்சப்பறத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார். 

கார்த்திகை திருவிழாவின் போது, தீப்பந்தங்கள் சூழ முருக பெருமான் வெளிவீதியுலா வந்த காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. 

Spread the love

  கார்த்திகை திருவிழாதீப்பந்தங்கள்நல்லூர் கந்தசுவாமி ஆலயம்