டிரம்ப் – புதின் சந்திப்பு: கேமராவில் உறைந்த வரலாற்றுத் தருணங்கள்

16 ஆகஸ்ட் 2025, 09:13 GMT

புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் – ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இடையிலான அலாஸ்கா சந்திப்பு முடிவு ஏதும் எட்டப்படாமலேயே நிறைவுற்றது.

அமெரிக்காவில் யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியைப் போல அல்லாமல், ரஷ்ய அதிபர் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு காத்திருந்தது. அலாஸ்காவில் தனது சிறப்பு விமானத்தில் இருந்து புதின் இறங்கி சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த போதே, காத்திருந்த டிரம்ப் கைத்தட்டி உற்சாகமாக வரவேற்றார். இருவரும் கைகுலுக்கிக் கொண்ட பிறகு ஒன்றாக சிவப்புக் கம்பளத்தில் நடந்து சென்றனர்.

புதின் தனக்காக காத்திருந்த ரஷ்ய அதிபருக்கான காரை விடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்புடன் இணைந்து அவரது காரிலேயே சந்திப்பு நடக்கவிருந்த இடத்திற்கு சென்றார். இருவரது முகத்திலுமே உற்சாகம் தென்பட்டது.

அலாஸ்காவில் நடைபெற்ற டிரம்ப் – புதின் சந்திப்பின் முக்கிய தருணங்கள் இந்த விளக்கப்படத்தில் பார்க்கலாம்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது