Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
புதின் செயலால் டிரம்புக்கு அவமானமா? அலாஸ்கா சந்திப்பில் யாருக்கு என்ன கிடைத்தது?
பட மூலாதாரம், Getty Images
16 ஆகஸ்ட் 2025, 06:45 GMT
புதுப்பிக்கப்பட்டது 36 நிமிடங்களுக்கு முன்னர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் யுக்ரேன் போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்தாமலே அலாஸ்காவிலிருந்து கிளம்பினர்.
மூன்று மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். ஆனால் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை.
இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட மூன்று பிபிசி செய்தியாளர்கள் இதன் மூலம் இருநாடுகளுக்கும் என்ன பலனென்றும், யுக்ரேனில் நடைபெற்று வரும் போரில் அடுத்த என்ன நடக்கும் என்றும் அலசுகின்றனர்.
‘டிரம்பின் நன்மதிப்பை குறைத்துவிட்டது’
வட அமெரிக்க பிபிசி செய்தியாளர் அந்தோணி ஜுர்ச்செர்
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இது பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு எந்த ஒப்பந்தமும் இல்லை, போர் நிறுத்தமும் இல்லை என்பதை சுற்றி வளைத்து கூறும் வழியாகும். உறுதியான தகவல்கள் எதுவுமே இல்லை.
பேச்சுவார்த்தையில் தானும் புதினும் “நல்ல முன்னேற்றத்தை” ஏற்படுத்தியதாக டிரம்ப் கூறினார். ஆனால் அவை என்னவென்று தகவலும் இல்லை, அது உலகத்தின் கற்பனைக்கு விடப்பட்டது.
பின்னர் “நாங்கள் அடைய வேண்டிய இடத்தை அடையவில்லை” என்று மட்டும் கூறி செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் சென்றார் டிரம்ப்.
மிக நீண்ட தூரம் பயணித்த டிரம்ப் இத்தகைய விவரிக்க முடியாத பதிலைக் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் எதிர்கால பேச்சுவார்த்தைகளை மட்டுப்படுத்தும் ஒருதலைபட்சமான சலுகைகளையோ அல்லது ஒப்பந்தங்களையோ டிரம்ப் வழங்கவில்லை என்பதால் யுக்ரேன் அதிகாரிகளும் அமெரிக்காவின் ஐரோப்பிய கூட்டாளிகளும் நிம்மதியாக இருக்கலாம்.
பட மூலாதாரம், White House
படக்குறிப்பு, அடுத்த முறை சந்திப்பு மாஸ்கோவில் நடக்கும் என புதின் தெரிவித்துள்ளார்.எதிர்காலத்தில் யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஜெலன்ஸ்கியை உள்ளடக்கிய சந்திப்பு தொடர்பாகவும் எந்த தகவலும் இல்லை. “அடுத்த முறை சந்திப்பு மாஸ்கோவில் நடக்கும்” என்கிற புதினின் அறிவிப்பும் எதையும் உறுதி செய்யவில்லை.
இந்தப் பேச்சுவார்த்தையில் ரஷ்யா, யுக்ரேனை விட டிரம்ப் இழப்பதற்கு எதுவுமில்லை என்ற போதிலும், இந்த சந்திப்பு தோல்வியடைய 25% வாய்ப்பு மட்டுமே உள்ளது என்கிற டிரம்பின் உத்தரவாதத்தால் அவரின் உள்ளூர் மற்றும் சர்வதேச கௌரவம் சற்று அடிபட்டுள்ளது.
அது போக, செய்தியாளர் சந்திப்பை மிகப்பெரிய முன்னுரை எதுவும் இல்லாமல் புதின் தொடங்கிய நிலையில் அமைதியாக நின்றதால் ஏற்பட்ட வெளிப்படையான அவமதிப்பையும் டிரம்ப் சந்திக்க வேண்டியுள்ளது. இது வெள்ளை மாளிகை நடைமுறைக்கு முரணானது. வழக்கமாக அமெரிக்க அதிபர் தான் செய்தியாளர் சந்திப்பை தொடங்குவார்.
அலாஸ்கா அமெரிக்க பிரதேசமாக இருந்தாலும் புதின் வீட்டில் இருப்பதைப் போன்றே உணர்ந்தார். 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவிற்கு விற்கப்படுவதற்கு முன்பாக இந்த இடம் “ரஷ்ய அமெரிக்கா” என இருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். இது இனிவரும் நாட்களில் டிரம்புக்கு எதிராகப் பேசப்படலாம். ஊடகங்களும் இந்தச் சந்திப்பு தோல்வியில் முடிந்ததாகச் சித்தரிப்பார்கள்.
செய்தியாளர்களிடம் மிகப்பெரிய கேள்வி ஒன்று இருந்தது. அது, தற்போது டிரம்ப் ரஷ்யாவுக்கு தண்டனையாக அவர் அச்சுறுத்திய புதிய பொருளாதார தடைகளை விதிக்க முடிவு செய்வாரா என்பது தான்.
இந்தக் கேள்விக்கு ஃபாக்ஸ் நியூஸ் பேட்டியில் பகுதியளவு பதிலளித்தார் டிரம்ப். அத்தகைய நகர்வுகளை எடுப்பது பற்றி, “இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தார். ஆனால் ரஷ்யா போர் நிறுத்தம் மேற்கொள்ளவில்லை என்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என டிரம்ப் கூறியிருந்த நிலையில் இத்தகைய தெளிவில்லாத பதில் நிறைய கேள்விகளைத் தான் எழுப்புகிறது.
“புதினுக்கு உலகளாவிய ஊடக வெளிச்சம் கிடைத்துவிட்டது”
ஸ்டீவ் ரோசென்பெர்க், ரஷ்ய ஆசிரியர்
ஒரு நிகழ்வில் கேள்விகளே இல்லையென்றால் அது செய்தியாளர் சந்திப்பாக இருக்க முடியாது
புதினும் டிரம்பும் தங்களின் கருத்துகளைத் தெரிவித்த பிறகு எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் சென்றதும் அரங்கில் ஒரு ஆச்சர்யமான உணர்வு நிலவியது.
ரஷ்ய அதிகாரிகளும் செய்தியாளர்களின் எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் உடனடியாக கலைந்து சென்றனர்.
யுக்ரேனில் நடைபெற்று வரும் போர் தொடர்பாக புதினுக்கும் டிரம்புக்கும் இடையே தற்போதும் கருத்து வேறுபாடுகள் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
ரஷ்யா போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். ஆனால் புதின் அதனை செய்யவில்லை.
பட மூலாதாரம், White House
படக்குறிப்பு, யுக்ரேனில் ரஷ்யா நடத்தி வரும் போரை முடிவுக்கு கொண்டு வர புதினை அவரால் சம்மதிக்க வைக்க முடியவில்லை.பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் வேறு விதமான சூழ்நிலை இருந்தது. புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கினார் டிரம்ப். ரஷ்ய அதிபரை ஒரு கௌரவ விருந்தினர் போல நடத்தினார் டிரம்ப்.
இன்று புதினுக்கு உலகளாவிய ஊடக வெளிச்சம் கிடைத்துவிட்டது. உலகின் சக்திவாய்ந்த நாட்டின் தலைவருடன் மேடையைப் பகிர்ந்து கொண்டார்.
ஆனால் நடந்த விஷயங்களுக்கு டிரம்ப் எப்படி எதிர்வினையாற்றுவார் என்கிற கேள்வி உள்ளது. யுக்ரேனில் ரஷ்யா நடத்தி வரும் போரை முடிவுக்கு கொண்டு வர புதினை அவரால் சம்மதிக்க வைக்க முடியவில்லை.
முன்னர் ரஷ்யாவிடம் கடுமையாக அணுகுமுறையை கடைபிடித்தார் டிரம்ப். பலமுறை காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையில் ரஷ்யா போர் நிறுத்தம் மேற்கொள்ளவில்லை என்றால் மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.
ஆனாள் அது எதையும் அவர் செய்யவில்லை. இனியும் செய்வாரா என்கிற கேள்வியும் உள்ளது.
“அடுத்தது என்ன நடக்கும் என்கிற அச்சமும் யுக்ரேனுக்கு உள்ளது”
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, புதின் தனது சிறப்பு ராணுவ நடவடிக்கை என்கிற உண்மையான நோக்கத்தை பின் தொடர தீர்மானத்துடன் இருப்பதாகவே தெரிகிறது.விட்டலி ஷெவ்செங்கோ, ரஷ்யா ஆசிரியர், பிபிசி மானிட்டரிங்
அலாஸ்காவில் நடந்தவை போரை இறுதி கட்டத்தை நோக்கி நகர்த்தவில்லை எனப் பலரும் உணரலாம். ஆனால் யுக்ரேன் நிலங்களை இழக்கக் கூடிய எந்த ஒப்பந்தமும் அறிவிக்கப்படவில்லை என அந்நாட்டில் நிம்மதியான ஒரு சூழல் நிலவும்.
ஆனால் இரு தலைவர்களின் கூட்டு சந்திப்பில், இந்த மோதலின் முதன்மை காரணங்கள் பற்றி புதின் பேசியதாலும் அதனை நீக்குவது தான் நிலைத்த அமைதிக்கு வழிவகுக்கும் எனக் கூறியதாலும் யுக்ரேனியர்கள் எச்சரிக்கை உடனே இருப்பார்கள்.
இது புதின் தனது சிறப்பு ராணுவ நடவடிக்கை என்கிற உண்மையான நோக்கத்தை பின்தொடர தீர்மானத்துடன் இருப்பதாகவே தெரிகிறது. அது யுக்ரேனை சுதந்திரமான நாடு என்கிற நிலையிலிருந்து அகற்றுவது தான். மூன்றரை ஆண்டுகால மேற்கத்திய முயற்சிகள் புதினின் மனதை மாற்றுவதில் தோற்றுவிட்டன, தற்போது அதில் அலாஸ்கா உச்சிமாநாடும் அடங்கும்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்த நிலையற்றத்தன்மையும் கவலையளிக்கிறது. அடுத்து என்ன நடக்கும், ரஷ்யாவின் தாக்குதல்கள் குறையாமல் தொடருமா என்கிற கேள்விகளும் உள்ளன.
கடந்த சில மாதங்களாக பல மேற்கத்திய நாடுகளின் காலக்கெடு கடந்தாகிவிட்டது. ஆனால் எந்த அச்சுறுத்தலும் செயல்பாட்டிற்கு வரவில்லை. இது புதின் தனது தாக்குதல்களைத் தொடர்வதற்கான அனுமதியாகவே யுக்ரேனியர்கள் பார்க்கிறார்கள். அலாஸ்காவில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததையும் அவர்கள் அதே கோணத்தில் தான் பார்ப்பார்கள்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு