Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்றும் காற்றாலை, கனியமணல் செயற்திட்டங்கள் தொடர்பில் உறுதியானதும் இறுதியானதுமான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து 13 ஆவது நாநாளாகவும்இன்று(15)மன்னார் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
மன்னார் பிரதான சுற்றுவட்ட பகுதியில் மக்கள் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியாவாரும் 13 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக அண்மையில் இடம் பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பில் காற்றாலை செயற்திட்டங்களை ஒரு மாத காலம் நிறுத்தி வைப்பதாக ஜனாதிபதியினால் வாக்குறுதி வழங்கப்பட்ட போதிலும் உறுதியான முடிவு வரும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாகவே கடந்த வாரம் போராட்டம் இடம் பெற்ற நிலையில் ஒரு வாரகாலம் காற்றாலை செயற்திட்டத்தை நிறுத்தி வைப்பதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்த நிலையில் அவ் வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் நள்ளிரவு நேரங்களில் காற்றாலை செயற்திட்டங்களுக்கான உதிரிபாகங்கள் மன்னார் நகருக்குள் மக்களின் எதிர்ப்பை மீறியும் கொண்டு செல்லப்பட்டது. இந்த பின்னனியிலேயே ஜானதிபதியின் வாக்குறுதியிலும் நம்பிக்கை அற்ற தன்மையே காணப்படுவதன் அடிப்படையில் மக்கள் தொடர்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரச்சாரம் என அனைத்திலும் தேசிய மக்கள் சக்தியின் வாக்குறுதியாக காற்றாலை செயற்திட்டத்துக்கு அனுமதி தமது அரசாங்கத்தால் வழங்கப்படாது என பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு வாக்குறுதி வழங்கப்பட்ட போதும் அவை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் இந்த ஒரு மாத வாக்குறுதியை மாத்திரம் எவ்வாறு நம்புவது என பொது மக்கள் கேள்வி எழுப்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது