சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் றோம் சாசனத்தை ஏற்றுக் கொள்ளுமாறு இலங்கையை ,  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு றோம் சாசனத்தை ஏற்றுக் கொண்டால்  மனிதாபிமானம் மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் மோசமான மீறல்களுக்காக   இலங்கையின் அரசியல், இராணுவத் தலைவர்கள்  சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலை  ஏற்படும்

இதேவேளை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை விடுவித்தல், புதிய நிலங்களை கைப்பற்றுவதனை  இடைநிறுத்தல், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தல், பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் முன்னெடுப்புகளுக்கு ஆதரவளித்தல், காணாமல் போனோரின் அலுவலகம் நியாயமாக செயற்படுவதனை  உறுதிப்படுத்தல் போன்ற நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை தொடர்பான அறிக்கையில் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது