Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தால் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான 19வது ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது.
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 3098 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் பந்தலில் குறித்த அஞ்சலி நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது உயிரிழந்தவர்களின் நினைவாக மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
செஞ்சோலை படுகொலை கடந்த 2006 ஆகஸ்ட் 14 அன்று செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தில் நடந்த விமானத் தாக்குதலாகும். இலங்கை விமானப்படை நடத்திய இந்த தாக்குதலில் 51 மாணவிகள் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.