பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனால் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொலைகளில் முக்கிய துப்பாக்கி சூடு நடாத்திய பிள்ளையானின் சகாவான முகமட் ஷாகித் என்பவரை காத்தான்குடியில் வைத்து குற்றப் புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை (13.08.25) மாலை சந்தேகநபர் அவரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்படு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கடந்த ஏப்பிரல் ஏழாம் திகதி கைது செய்தனர்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையையடுத்து காத்தான்குடியைச் சேர்ந்தவரும் கடந்த காலத்தில் பிள்ளையானுடன் செயற்பட்ட 45 வயதுடைய முகமட் ஷாகித்தை அவரது வீட்டில் வைத்து கொழும்பில் இருந்து nசன்ற அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்டவர் கடந்த 2024 ஜூன் 17ஆம் திகதி காத்தான்குடி மீன்பிடி இலாகாவீதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் இருந்த பெணிடம் தங்க ஆபரணங்களை கொள்ளையடிப்பதற்காக கை துப்பாக்கியால் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியிருந்தார்.

இதனையடுத்து அவரை கைது செய்து மூன்று நாள் காவற்துறை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்த நிலையில் அவரிடமிருந்து அந்த கைதுப்பாக்கியை மீட்க முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.