படுகாயமடைந்த, மிக ஆபத்தான நிலையில் நபர் ஒருவரை யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நபர்கள் தப்பியோடியுள்ள நிலையில் , அவர்கள் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் படுகாயமடைந்து, சுயநினைவின்றிய நிலையில் சிலர் நேற்றைய தினம் புதன்கிழமை (13.08.25)வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பனையில் இருந்து தவறி விழுந்தமையாலையே படுகாயமடைந்தார் என வைத்தியசாலையில் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையில் காயமடைந்தவரை அனுமதித்த நபர்கள் வைத்திய சாலையில் இருந்து தலைமறைவாகியுள்ளனர்.

அந்நிலையில் காயமடைந்தவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் போது, குறித்த நபர் பனையில் இருந்து விழுந்தமைக்கான காயங்கள் போன்றதான காயங்கள் இல்லாதமையால் , வைத்தியசாலை நிர்வாகம் அது தொடர்பில் காவற்துறையினருக்கு அறிவித்துள்ள நிலையில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த நபர் சுயநினைவின்றி ஆபத்தான நிலையிலையே சிகிச்சை பெற்று வருகின்றார்