Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பேருந்து – மோட்டார் சைக்கிள் விபத்தில் , பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
எழுதுமட்டுவாழ் பகுதியை சேர்ந்த செல்வகுணசிங்கம் பேரின்பநாயகி (வயது 55) என்பவரே உயிரிழந்துள்ளார்.
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்துடன், எழுதுமட்டுவாழ் பகுதியில் சிறு வீதியில் இருந்து யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளை ஏற்ற முற்பட்ட பெண் விபத்துக்குள்ளானதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பெண்ணை , சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பில் கொடிகாம காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.