மன்னாரில் இருந்து படகு மூலம் சென்று பெண் தமிழகத்தில் தஞ்சம்!

மதுரி Wednesday, August 13, 2025 மன்னார்

இலங்கையில் இருந்து பெண் ஒருவர் கடல் வழியாகப் படகு மூலம் சென்று  தரையிறங்கி தமிழகத்தின் அரிச்சல்முனையில் தஞ்சம் அடைந்துள்ளார்.

மன்னார் மாவட்டம், தலைமன்னார் கிராமத்தில் இருந்து  நேற்று அதிகாலை ஒரு மணியளவில்  அரிச்சல்முனையை மேற்படி பெண் சென்றடைந்துள்ளார்.

அவர் 2 இலட்சம் ரூபா பணம் கொடுத்து படகு மூலம் சென்றுள்ளார். 

இந்நிலையில் அவர் தற்போது மண்டபம் மெரைன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Related Posts

மன்னார்

NextYou are viewing Most Recent Post Post a Comment