Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
செம்மணி, முல்லைத்தீவு சம்பவங்களுக்கும், தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு நீதிகோரியும் மட்டக்களப்பு
காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவிடத்திற்கு முன்பாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, சர்வதேச நீதி விசாரணை வேண்டும், இராணுவமே வெளியேறு, சத்துருக்கொண்டான் படுகொலைக்கு நீதிவேண்டும், சர்வதேசமே எங்களுக்கு நீதியைப் பெற்றுத்தா, தமிழர் தாயகம் தமிழர்களுடையது, செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதிவேண்டும், முல்லைத்தீவு இளம் குடும்பஸ்தர் படுகொலைக்கு நீதிவேண்டும் போன்ற பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டன.
தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில்,
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் ஆகியோரும் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.