செம்மணியில் ஏற்கனவே உப்பளம் இருந்த இடத்தில் கட்டுமாணப் பணிகளை மேற்கொள்ளும் போது சாத்தியப்பாட்டு அறிக்கையினை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாக வடமாகாண அவைத்தலைவர் , மாவட்ட செயலருடன் கலந்துரையாடியுள்ளார்.

வட மாகாண அவைத் தலைவர் சீ. வி. கே. சிவஞானம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை மாவட்ட செயலரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது கல்லுண்டாய் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற கழிவகற்றல்  செயற்பாடு , செம்மணியில் ஏற்கனவே உப்பளம் இருந்த இடத்தில் கட்டுமாணப் பணிகளை மேற்கொள்ளும் போது சாத்தியப்பாட்டு அறிக்கையினை பெற்றுக்கொள்ளுதல், யாழ்ப்பாணத்திற்கான கழிவு முகாமைத்துவம் மற்றும் பாலியாற்றிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான குடிநீரை கொண்டு வரும் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

அதேவேளை செம்மணி பகுதியில் , யாழ் .  வளைவுக்கு அருகில் உள்ள நீரேந்து பிரதேசங்களில் கட்டட இடிபாடுகளை கொட்டி , அவற்றை மேட்டு நிலமாக்கும் முயற்சிகள் கடந்த சில வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.