Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தமிழர்களின் பாரம்பரியக் கலையான கூத்து, காலப்போக்கில் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இத்தகைய சூழலில், பாரம்பரியக் கலையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. அந்தவகையில், ஆய்வு முறைகளில் ஒன்றான பங்குகொள் ஆய்வு செயற்பாட்டின் மூலம் கூத்தின் பாரம்பரிய தன்மை மாறாமல் அதை இன்றைய கால சூழ்நிலைகளுக்கேற்ப வடிவமைத்து சமூகத்திடம் ஒரு புதிய வடிவத்தினை வெளிப்படுத்தி சிந்திக்க வைத்த செயற்பாட்டினை பற்றி இந்நூல் வெளிப்படுத்துகின்றது.
சீலாமுனை கூத்து மீள்ருவாக்கம் அனுபவப் பகிர்வு 01 இப்புத்தகத்தினை ஏட்டண்ணாவியாரான செ. சிவநாயகம் அவர்கள் கூத்து மீள்ருவாக்கத்தினை பேராசிரியர் சி. ஜெயசங்கர் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட போது அவரின் அனுபவத்தினை நூலாக சமர்ப்பித்திருக்கின்றார்.
கூத்துக் கலை என்பது ஈழத் தமிழர்களின் வாழ்வோடு ஒன்றிணைந்த ஒரு பாரம்பரிய கலை வடிவம். தலைமுறை தலைமுறையாக வாய்மொழி மரபாகவே வழங்கி வந்த இக்கலை, கால ஓட்டத்தின் நிமித்தமும் காலணித்துவ சிந்தனையை நிமித்தமும் பல இன்னல்களையும் அதன் பாரம்பரிய தன்மையையும் இழந்து கொண்டு வருகின்றது.
ஏன் இந்த கூத்துக் கலையினை பார்க்க மறுக்கின்றார்கள்? அதில் ஏன் நாட்டம் குறைவாக இருக்கின்றது? கூத்தினை பழக்கும் அண்ணாவியாரை ஏன் உயர்ந்த இடத்தில் வைத்து பார்ப்பதில்லை? என்ற சில கேள்விகள் என் மனதில் இருக்கின்றன.
காலனியம். பின் காலனியம், நவீனம், பின் நவீனம், காலனிய நீக்கம் என அனைத்து கட்டங்களையும் கற்று வந்த சமூகம் கூட ஏன் நம் பாரம்பரிய கலையினை வெறுக்கின்றது என்று எனக்கு புரியவில்லை. பல்கலைக்கழகங்களில் கூட அண்ணாவியர் வருகை தந்தால் பெரிதாக மரியாதை கிடைப்பதில்லை. படித்தவர் ஒருவர் பல்கலைக்கழகத்திற்கு வந்தால் அவருக்கு கிடைக்கும் மரியாதைக்கும் அண்ணாவியாருக்கும் கிடைக்கும் மரியாதைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.
இப் புத்தகத்தின் முன்னுரையில் ஒரு விடயம் கூறப்பட்டிருந்தது. சாதாரண மனிதர்களுடைய கருத்துக்கள். அபிப்பிராயங்கள் போன்றன கணக்கில் கொள்ளப்படுவதில்லை. அவர்கள் ஆய்வாளருக்கு தகவல்களை வழங்கும் வழங்கிகளாக மட்டுமே இருக்கின்றார்கள். படிக்காத சமூகத்தினை பாமரர்கள் என்று சுட்டுகின்றோம். ஆனால் பெரும் ஆய்வாளர்கள் யாரை பாமரர்கள் என்றார்களோ அவர்களிடம் சென்று தானே தகவல்களை பெறுகின்றார்கள். அப்போது அவர்களுக்கு அவர்கள் பாமரர்கள் என்று நினைவுக்கு வரவில்லையா?
சீலாமனை கூத்து மீள்ருவாக்கம் என்ற நூல் மீள்ருவாக்கம் செய்யப்பட்ட கூத்துக்கள், அதில் என்னென்ன விடயங்கள் மீள்ருவாக்கம் செய்யப்பட்டன என்ற விடயங்களை தெளிவான எடுத்துக்காட்டுகளுடன் வடிவமைத்துள்ளது.
கூத்து மீள்ருவாக்கம் என்பது ஏதாவது ஒரு கூத்தினை எடுத்து அதில் இருக்கும் குறைகளை சுட்டி அதனை மாற்றியமைத்து இன்றைய கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூத்தினை உருவாக்குவதா? அல்லது அதன் பாரம்பரிய அழகியல் தன்மையை மாற்றியமைப்பதா? ஒரு கலையானது சமூகத்தில் தலைமுறை தலைமுறையாக அதன் பாரம்பரியம் பேணப்பட்டு திகழ்ந்து வருகின்ற போது அதன்நுணுக்கங்களையும் அழகியல் தன்மைகளையும் நாம் எவ்வாறு மாற்றியமைக்க முடியும். தொன்றுதொட்டு சமூகங்களால் முன்னெடுக்கப்படும் இக்கலை அரசு அதிகாரங்களை மேம்படுத்தியும், சமூகத்தினையும் மக்களையும் சாதி என்று அடிப்படையில் பிரித்தும், ஆண்கள் ஒடுக்கும் இடத்தில் பெண்களை வைத்தும் எவ்வாறு அடக்கி ஒடுக்கப்பட்ட சமூக மக்களை கொண்டே ஆற்றுகை செய்யப்பட்டு வந்துள்ளது. சீலா முனை கிராமத்தில் முதன் முதலாக கூத்து மீள்ருவாக்க பங்குகொள் ஆய்வு செயற்பாட்டினை பேராசிரியர் சி. ஜெயசங்கர் அவர்கள் மேற்கொண்டார்.
இந் நூலில் சிவநாயகம் அவர்கள் ஒரு விடயத்தினை கூறினார். அதாவது கூத்து என்று சொல்லி தற்போது பாடசாலைகளில் ஆடப்படும் கூத்துக்களை படச்சட்ட மேடையில் அரை மணித்தியாளத்துக்குள் ஆடி முடித்து விடுகிறார்கள். இதனை கூத்து என்று எப்படி ஏற்றுக்கொள்ளலாம்? என்று தனது கருத்தினை கூறியிருந்தார். கூத்துக் கலையில் இவ்வாறு மாற்றம் செய்வதால் ஏற்படும் தாக்கத்தினை சிவநாயகம் அவர்கள் தெளிவாக கூறியிருக்கின்றார். அதை நான் இதில் ஒப்புவிக்கின்றேன்.
கூத்து என்று ஏற்றுக்கொள்வதாயின், பூமி தன்னைத்தானே சுற்றி சூரியனையும் சுற்றி வருவது போல கூத்தர் தன்னையும் சுற்றிக் கொண்டு கூத்துக்களரியையும் சுற்றிக்கொண்டு தாளங்களுக்கு ஏற்றாற்போல சுற்றி ஆடும் பாரம்பரியமான ஆடும் முறையே கூத்துக் களில் உண்டு. படச்சட்ட மேடையில் கூத்து என்று சொல்லி ஆடுவதால் மேடையைச் சுற்றி எப்படி ஆடுவது என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
படச்சட்ட மேடைகளில் கூத்து என்று சொல்லி கூத்தை ஆடுவதால் கூத்தில் உள்ள பாரம்பரியப் பரிமாணங்களும் கூத்தின் தனித்துவமும் மரபு முறையும் இழக்கப்படுகிறது.
ஈழத்தமிழர்களுக்கென்று முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அரங்கின் உருவம் மக்கள் மத்தியில் இருந்து அழிக்கப்படுகிறது. இது கூத்துக்கலைக்கும் எம் முன்னோர்களுக்கும் செய்யப்படும் துரோகம் மட்டும் அல்ல கூத்துக்கலையின் அழிவிற்கே வழிகோலுகிறது.
முற்காலங்களில் சுத்துக்கள் ஆரம்பம் முதல் அரங்கேறும் வரை அண்ணாவியாரின் நெறிப்படுத்தலின் கீழேயே கூத்து சம்பந்தப்பட்ட சகல விடயங்களும் நடந்தேறுகின்றன. இதனால் அண்ணா வியாருக்கே அங்கு முதல் மரியாதை செய்யப்படுகிறது. இதுவே கூத்தின் மரபு முறை, ஆனால் படச்சட்ட மேடைகளில் வரும் கூத்துக் களில் அண்ணாவியாரைக் காண்பதே அரிதாக இருக்கின்றது.
படச்சட்ட மேடைகளில் கூத்தை ஆடுவதால் பார்வையாளர்க ளுக்குக் கூட சுதந்திரம் இருப்பதில்லை.காரணம் கூத்துக்களில் வரும் சம்பவங்களைப்பற்றி உடனுக்குடன் உரையாடுவது அங்கு தவிர்க்கப்படுகிறது. வட்டக்களரியில் கூத்தை ஆடும் போது பல சுதந்திரங்களைப் பார்வையாளர்கள் பெறுவார்கள். நிலத்தில் படுத்துக்கொண்டே கூத்தை ரசிப்பார்கள். பக்கத்தில் உள்ளவர் களிடம் கூத்தின் செயற்பாடுகளைப் பகிர்ந்து பாரம்பரியப் பரிமாணங்களும் கூத்தின் தனித்துவமும் மரபு முறையும் இழக்கப்படுகிறது.
ஈழத்தமிழர்களுக்கென்று முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அரங்கின் உருவம் மக்கள் மத்தியில் இருந்து அழிக்கப்படுகிறது. இது கூத்துக்கலைக்கும் எம் முன்னோர்களுக்கும் செய்யப்படும் துரோகம் மட்டும் அல்ல கூத்துக்கலையின் அழிவிற்கே வழிகோலுகிறது.
முற்காலங்களில் கூத்துக்கள் ஆரம்பம் முதல் அரங்கேறும் வரை அண்ணாவியாரின் நெறிப்படுத்தலின் கீழேயே கூத்து சம்பந்தப்பட்ட சகல விடயங்களும் நடந்தேறுகின்றன. இதனால் அண்ணா வியாருக்கே அங்கு முதல் மரியாதை செய்யப்படுகிறது. இதுவே கூத்தின் மரபு முறை, ஆனால் படச்சட்ட மேடைகளில் வரும் கூத்துக் களில் அண்ணாவியாரைக் காண்பதே அரிதாக இருக்கின்றது.
படச்சட்ட மேடைகளில் கூத்தை ஆடுவதால் பார்வையாளர்க ளுக்குக் கூட சுதந்திரம் இருப்பதில்லை. காரணம் கூத்துக்களில் வரும் சம்பவங்களைப்பற்றி உடனுக்குடன் உரையாடுவது அங்கு தவிர்க்கப்படுகிறது. வட்டக்களரியில் கூத்தை ஆடும் போது பல சுதந்திரங்களைப் பார்வையாளர்கள் பெறுவார்கள். நிலத்தில் படுத்துக்கொண்டே சுத்தை ரசிப்பார்கள். பக்கத்தில் உள்ளவர் களிடம் கூத்தின் செயற்பாடுகளைப் பகிர்ந்து
கொள்வார்கள். நினைத்த நேரத்தில் களரியை விட்டு வெளியில் சென்றுவருவார்கள். இப்படியான சுதந்திரங்களைப் படச்சட்ட மேடையில் காணமுடியுமா?
படச்சட்ட மேடையில் கூத்தர் கூத்து ஆடும்போது மறைந்துநின்று மத்தளம் வாசிக்கும் அண்ணாவியார் எப்படி கூத்தரின் கால்தாளங் களைக் கவனித்து மத்தளம் வாசிப்பது? கூத்தர் சிலவேளைகளில் பாடல்களிலோ, கால்தாளங்களிலோ பிழைகள் ஏற்படும் பட்சத்தில் அப்பிழைகள் வெளியே தெரியாவண்ணமும் கூத்தர் அப்பிழைகளைப் புரிந்து கொள்ளக்கூடிய வண்ணமும் மத்தளத்தின் மூலம் தாளங்களை மாற்றி மேல் எழுப்புவது ஒரு சிறந்த அண்ணாவியாரின் திறமை யினாலேயாகும். இதைப் படச்சட்ட மேடைகளில் மறைந்து நிற்கும் அண்ணாவியாரால் செய்ய முடியுமா?
அரை மணித்தியாலத்தில் படச்சட்ட மேடையில் கூத்தைச் செய்வ தாயின் கூத்தின் முழு அம்சங்களும் மரபுமுறையும் இழக்கப்படுகிறது.
மேலும் இந்நூலில் கூத்தை ஆடிய முறைகளை மூன்று காலங்களாக பிரித்து ஒவ்வொரு காலகட்டத்தில் கூத்து எவ்வாறு ஆடப்பட்டது. முன்னைய காலத்தில் இருந்து இவ்வாறான மாற்றங்களை கூத்து கலையானது சந்தித்தது என்பதை தெளிவாக கூறியிருந்தார். முன்னைய காலங்களில் கூத்தானது ஒரு வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு தடவைகள் ஆடப்பட்டது. ஆனால் இடைக்காலத்தில் இரண்டு அல்லது மூன்று வருடம் அல்லது மூன்று வருடத்திற்கு ஒரு முறையே கூத்துகள் ஆடப்பட்டன. அன்றிருந்து முன்னீடுகாரர்கள், பஞ்சாயக் குழுவினருக்கு பதிலாக பத்து பேர் அடங்கிய குழுவினை தெரிவு செய்து அந்தப் பத்துப் பேர்களுக்கும் முகாமையாளர்கள் என்று நியமித்தார். காலப்போக்கில் முன்னீடுகாரர்கள், பஞ்சாயக்குழு, மனேஜர்குழு என்பதற்குப் பதிலாக தலைவர். செயலாளர், பொருளாளர் என காணப்படுகின்றனர்.
இந்நூலில் குறிப்பிட்ட படி மீள்ருவாக்கம் செய்யப்பட்ட கூத்தாக தர்மபுத்திரன் எனும் கூத்தினை “சிம்மாசனப்போர்” எனும் கூத்தாக மீள்ருவாக்கம் செய்யப்பட்டது. இக்கூத்தின் மூலம் பெண்களின் சுதந்திரமான நியாயமான உரிமைகள் நிலை நாட்டப்பட்டது, இக் கூத்தானது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடந்த போராட்டம் அல்ல, அரசு உரிமைக்கும் ஆண்களின் அதிகாரத்துக்கும் நடந்த போர் என்பதே சித்தரித்துக் காட்டினார்கள், பெண்ணிலை வாத சிந்தனைகள் உள்வாங்கப்பட்டு இக்கூத்து மீள்ருவாக்கம் செய்யப்பட்டது.
இக்கூத்தின் பாடல்கள் அமைக்கும் போது
கூத்தின் மரபுமுறை தவறாது பாடல்களை அமைத்தது.
பாத்திரங்களின் குணாம்சங்களுக்கு ஏற்ற பாடல்களை அமைத்தது.
பாடல்களின் கருத்துக்கள் எல்லோருக்கும் இலகுவில் விளங்கிக் கொள்ளக்கூடியதாக
பாடல்களையும் விருத்தங்களையும் அமைத்தது.
சி. ஜெய்சங்கர் அவர்கள் இக் கூத்து மீள்ருவாக்க பணியில் பாடல்களை உருவாக்கி கொடுத்து, சிம்மாசனப்போர் என்ற வடமோடிக் கூத்தில் பிரதான பாத்திரங்களில் ஒன்றான கிருஷ்ணன் என்னும் பாத்திரத்தை ஏற்று திறம்பட நடித்தார்.
அடுத்து மீள்ளுவாக்கம் செய்யப்பட்ட “சீதை சூர்ப்பனகை வதை” கூத்தானது இராம நாடகம் என்னும் கூத்தினை அடிப்படையாக வைத்து மீள்ருவாக்கம் செய்யப்பட்டு இந்நூலாசிரியர் செ.சிவநாயகம் அவர்களினால் எழுதப்பட்டது.
இந் நூலானது கூத்துக்கலை பற்றிய தெளிவையும், அதன் காலகட்ட ரீதியான மாற்றத்தினையும், மீள்ருவாக்கம் என்ற பதத்தின தெளிவையும், கூத்தில் காணப்படும் குறைகளை கண்டு அதனை கால ஓட்டத்திற்கேற்பவாறு மாற்றியமைத்து சமூகத்தினை பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதை ஆணித்தனமாக கூறுகின்றது.
கோபிகா நடராசா,
நுண்கலைத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்.