நாமல் ராஜபக்சவின் நீலப்படையணியில் இருந்த சாணக்கியன் மற்றும் ரணிலின் விசுவாசியான சுமந்திரன் ஆகியோரின் தாளத்துக்கேற்ப ஆடுவதற்கு எமது மக்கள் கொண்டை கட்டிய சீனர்கள் அல்லர் என அரச அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள முறையாக இடம்பெற்று வருகின்றன. தேவையான வளங்களை அரசாங்கம் வழங்கி வருகின்றது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளதாகவம் கடற்றொழில்,; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவித்துள்ளார்.

சுமந்திரனுக்கு ரணிலுடன் இருக்கும்போது நன்றாக இருந்தார். யாழ். நூலகத்தை எரித்த பாவிகளின் பைல்களை தூக்கிக்கொண்டு திரியும்போது தமிழ் மக்களின் பிரச்சினை அவருக்கு தெரியவரவில்லை. ஆனால் இன்று அவர் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கின்றார். 

மட்டக்களப்பில் 10, 15 பேரை அழைத்து சாணக்கியன் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றார். அவர் நாமல் ராஜபக்சவின் நீலப்படையணியில் இருந்தவர்.” – எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, கடந்தகால கொலைகள் தொடர்பில் கண்டறியப்பட வேண்டும். அதனால்தான் செம்மணி புதைகுழி தொடர்பான அகழ்வு பணி மற்றும் விசாரணைக்கு அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கிவருகின்றது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாதெனவும் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.