2019 மார்கழிக்குப் பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தொடர்ந்து நீதிக்கான போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு இச் சிறிய கொடுப்பனவு உதவி செய்தது. இது கோட்டாபய ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தப்பட்டதாக சமூக ஆர்வலர் ஒருவர் கருத்து பகிர்ந்துள்ளார்.

இதனை மீண்டும் வழங்குமாறு, தமிழ் அரசியல்வாதிகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இன்றுவரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டது ஒரு பேசுபொருளாக இருப்பதற்கு அவர்களின் குடும்பங்களின் தொடர்ச்சியான போராட்டமே பிரதான காரணம். பருவகால உணர்ச்சியாளர்கள் இக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை அரச கட்டமைப்பூடாக உறுதிசெய்வதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வது நன்று.

அரச கட்டமைப்பினூடாக இது மேற்கொள்ளப்படுவது, எம்மவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாக அமையும். அரியாலை செம்மணியில் அரியாலை இந்து சித்துப்பாத்தி மயானத்தில் மனிதப் புதைகுழி ஒன்று கண்டறியப்பட்டு, உலகின் கவனத்தை அது ஈர்த்துள்ள, மற்றும் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு இடம்பெறவுள்ள சந்தர்ப்பத்தில், இவ் அழுத்தத்தினை வழங்குவது பொருத்தமாக இருக்குமென சமூக ஆர்வலர் ஒருவர் கருத்து பகிர்ந்துள்ளார்